தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Ola Electric Car Can Go Up To 500km On A Full Charge

Ola electric car: ஃபுல் சார்ஜ் செய்தால் 500கிமீ போகுமா!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 16, 2022 11:28 AM IST

புதிதாக வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் கார்
ஓலா எலக்ட்ரிக் கார்

ட்ரெண்டிங் செய்திகள்

அதேசமயம் புதிய தொழில்நுட்பத்துடன் அதிவேக திறன் கொண்ட எலக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கி வருவதாக ஓலா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறுகையில்," இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் இருக்கும் கார்களில் தலை சிறந்த ஸ்போர்ட்ஸ் காராக இருக்கும். மேலும் 100 கிமீ வேகத்தை நான்கு நொடிகளில் கடந்து விடும். ஒருமுறை இந்த எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 500 கிமீ வரை செல்லும்.

மேலும் இந்த காரில் டிராக்-கோ எபிஷியன்ட் மற்றும் ஆல் கிளாஸ் ரூஃப் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மூவ் ஓஸ் என்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சொந்த ஓஎஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் சிறப்பான டிரைவிங் திறன்களைக் கொண்டுள்ளது.

மற்ற கார்களில் இல்லாத வகையில் சிறப்பான டிசைன், மிகச்சிறந்த புதிய தொழில்நுட்பம், சிறப்பான செயல் திறன் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த கார் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் குறித்து முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

WhatsApp channel