தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Okra Water : நீங்கள் 30 வயதைக் கடந்த ஆணா? உங்களுக்கு வெண்டைக்காய் தண்ணீர் என்ன தருகிறது தெரியுமா?

Okra Water : நீங்கள் 30 வயதைக் கடந்த ஆணா? உங்களுக்கு வெண்டைக்காய் தண்ணீர் என்ன தருகிறது தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jun 18, 2024 07:00 AM IST

Okra Water : நீங்கள் 30 வயதைக் கடந்த ஆணா? உங்களுக்கு வெண்டைக்காய் தண்ணீர் என்ன தருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Okra Water : நீங்கள் 30 வயதைக் கடந்த ஆணா? உங்களுக்கு வெண்டைக்காய் தண்ணீர் என்ன தருகிறது தெரியுமா?
Okra Water : நீங்கள் 30 வயதைக் கடந்த ஆணா? உங்களுக்கு வெண்டைக்காய் தண்ணீர் என்ன தருகிறது தெரியுமா?

ஆண்கள் வயதில் 30ஐக் கடந்தாலே ஒரு மைல்கல் என்றாகிறது. இந்த வயது முதல் குறுகிய கால ஆரோக்கியம் மட்டுமின்றி நீண்ட கால ஆரோக்கியம் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. 

அதற்கு உங்களுக்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுகிறது. குறிப்பாக இந்த தண்ணீர் 30 வயதைக் கடந்த ஆண்களுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இந்த தண்ணீர் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

நீரிழவு நோய்க்கு எதிரான தன்மை

30களின் ஆண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம். ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும். அதற்கு உங்களுக்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவும். வெண்டைக்காயில் நார்ச்சத்துக்கள் உள்ளது.

அது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தும். அது உங்கள் வயிறு சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச வழி செய்யும். வெண்டை விதைகள் மற்றும் தோலில் நீரிழிவுக்கு நோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

வெண்டை தண்ணீர் பருகும் ஆணுக்கு இந்த பலன் கிடைக்கிறது. ரத்த சர்க்கரையை இயற்கை முறையில் கட்டுப்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இது சிறந்த தேர்வு. எனவே இந்த தண்ணீரை தினமும் பருகுபவர்கள் சர்க்கரை நோய் அச்சமின்றி வாழலாம்.

செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது

இந்த வயதில் ஆண்களுக்கு செரிமான கோளாறுகள் மிகவும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்றாகும். வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் ஆகியவை பொதுவான கோளாறுகள், அது அன்றாட நடவடிக்கைகளை பாதித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். அதிர்ஷ்டவசமாக வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நன்மை தரும்.

வெண்டைக்காயில் மியூசிலேஜ் உள்ளது. இது செரிமான மண்டலத்துக்கு நன்மை தருகிறது. அது குடல் இயக்கத்துக்கு வழிவகுத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இந்த மியூசிலேஜ் இயற்கை மலமிலக்கியாக செயல்படுகிறது. குடல் இயக்கத்தை அதிகரித்து மலச்சிக்கலைப்போக்குகிறது. இதை அன்றாடம் பருகும்போது செரிமான கோளாறுகள் அனைத்தையும் போக்குகிறது.

நோய் எதிர்ப்புக்கு சிறந்தது

உடலில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வுக்கு, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் தேவை. குறிப்பாக வயதாகும்போது ஆண்களுக்கு அது கட்டாயம் தேவை. வெண்டை தண்ணீர் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

வெண்டையில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் உள்ளன. இவையனைத்தும் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். வெண்டைக்காயின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பை அதிகமாக்கி, காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றை தடுக்கும்.

இதயத்தை காக்கும்

30 வயதை கடந்த ஆண்களின் இதயத்தை காக்கும். வயது அதிகரிக்கும்போது இதய நோய் ஆபத்துக்களும் அதிகரிக்கும். எனவே இதயத்துக்கு தேவையான நற்பழக்கங்களை துவக்கத்திலேயே பெறுவது நல்லது. இதய ஆரோக்கியத்துக்கு வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், உடலில் சேரும் கொழுப்பை குறைக்கிறது. பித்தத்தை சேர்த்து அவற்றை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எல்டிஎல் கொழுப்பு எனப்படும் கெட்ட கொழுப்புக்களை உடலில் இருந்து நீக்குகிறது. இதனால் இதய நோய், பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

வெண்டையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தமனிகளில் ப்ளேக் சேர்வதை தடுக்கிறது. இதுதான் மாரடைப்புக்கு காரணம். எனவே தினமும் வெண்டை தண்ணீர் பருகும்போது அது இதய நோய் ஆபத்தை குறைத்து, இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்பு ஆரோக்கியம்

எலும்பின் ஆரோக்கியமும் வயது அதிகரிக்கும்போது குறையும். இதனால் எலும்புப்புரை நோய் ஏற்படுகிறது. வெண்டை தண்ணீர் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்பு உருவாக உதவுகிறது. வெண்டைக்காயில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே வெண்டை தண்ணீர் எடுப்பதை வழக்கமாக்கும்போது எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது.

வெண்டை தண்ணீர் தயாரிப்பது எப்படி?

4 வெண்டைக்காயை எடுத்து நன்றாக அலசிவிட்டு, அதன் தலை மற்றும் வால் பகுதியை வெட்டிவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். அதை ஒரு டம்ளர் தண்ணீரில் ஓரிரவு ஊறவைக்கவேண்டும். காலையில் அதை வடிகட்டி வெறும் தண்ணீரை மட்டும் பருகவேண்டும். இதை வெறும் வயிற்றில் பருகும்போது, அது அதிக பலன்களைத் தருகிறது.