பொடுகு முதல் முடி உதிர்வு வரை! தலைமுடி தொந்தரவுகளை போக்கும் எண்ணெய்கள்!
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து தற்காலம் வரை பின்பற்றப்படும் வைத்திய முறைகளில் முக்கியமானதாக எண்ணெய் இருந்து வருகிறது. இந்த எண்ணெய் உடலில் பல உருப்புகளுக்கு பல நன்மைகளை அளித்து இருந்தாலும், தலைமுடியின் அனைத்து விதமான தொந்தரவுகளுக்கும் நிவாராணியாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தியாவின் பாரம்பரிய மருத்துவத்தில் இருந்து தற்காலம் வரை பின்பற்றப்படும் வைத்திய முறைகளில் முக்கியமானதாக எண்ணெய் இருந்து வருகிறது. இந்த எண்ணெய் உடலில் பல உருப்புகளுக்கு பல நன்மைகளை அளித்து இருந்தாலும், தலைமுடியின் அனைத்து விதமான தொந்தரவுகளுக்கும் நிவாராணியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பலவீனமான தலைமுடி மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு எண்ணெய் உதவுகிறது.
உங்களுக்கும் பொடுகு மற்றும் முடி உதிர்வு நீங்கவில்லையா? ஆரோக்கியமான கூந்தலுக்கு முடி பராமரிப்பு மிகவும் முக்கியம். தலைக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது முக்கியம். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் எண்ணெயின் ஊட்டமளிக்கும் பண்புகள் முடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். ஆரோக்கியமான கூந்தலுக்கு முக்கியமான எண்ணெய்கள் பிணவருமாறு.
ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் ரோஸ்மேரி செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள கார்னோசிக் அமிலம் இறந்த செல்களை மீண்டும் உருவாக்கி தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக மாற்றும். இது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு பொடுகை போக்கவும் உதவுகிறது. ஐந்து அல்லது ஆறு டீஸ்பூன் ரோஸ்மேரி எண்ணெயை ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். ரோஸ்மேரி எண்ணெயை நேரடியாக சூடாக்க வேண்டாம். அதை இரட்டை கொதி முறையில் சூடாக்க வேண்டும். அதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி சூடாக்கி அதனுள் வேறு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். இவ்வாறு சூடாக்கி உபயோகிக்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு சிறந்தது. இது வறண்ட காலநிலையிலும் முடியை ஹைட்ரேட் செய்து மென்மையாக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் பொடுகை போக்கவும் உதவுகிறது. ஆலிவ் எண்ணெயைக் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள ரிசினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களின் நன்மையான பண்புகள் உச்சந்தலைக்கு நல்லது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், இது இயற்கையாகவே முடியை ஹைட்ரேட் செய்து ஆரோக்கியமாக மாற்றுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் எண்ணெய். இதில் உள்ள நல்ல கொழுப்புகள் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், தேங்காய் எண்ணெய் முடியை நீரேற்றமாக வைத்திருக்கவும், புரத இழப்பைத் தடுக்கவும் நல்லது. சிறிது சூடாக்கப்பட்ட வெள்ளி எண்ணெயை தலையில் தடவி மசாஜ் செய்வது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்