தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Oil Bath: “இப்படி மட்டும் எண்ணெய் தேய்ச்சு குளிக்காதீங்க.. வீட்டுக்கதவைத்தட்டும் பேராபத்து” - எச்சரிக்கும் மருத்துவர்!

Oil Bath: “இப்படி மட்டும் எண்ணெய் தேய்ச்சு குளிக்காதீங்க.. வீட்டுக்கதவைத்தட்டும் பேராபத்து” - எச்சரிக்கும் மருத்துவர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 17, 2024 05:57 PM IST

Oil Bath: “நல்லெண்ணையை இப்படி மட்டும் தேய்த்து குளிக்காதீர்கள். அப்படி தேய்த்துக்குளிக்கும் போது உடல்ரீதியாக நிறைய பிரச்சினைகள் வரும்” - எச்சரிக்கும் மருத்துவர்!

Oil Bath: “இப்படி மட்டும் எண்ணெய் தேய்ச்சு குளிக்காதீங்க.. வீட்டுக்கதவைத்தட்டும் பேராபத்து” - எச்சரிக்கும் மருத்துவர்!
Oil Bath: “இப்படி மட்டும் எண்ணெய் தேய்ச்சு குளிக்காதீங்க.. வீட்டுக்கதவைத்தட்டும் பேராபத்து” - எச்சரிக்கும் மருத்துவர்!

ட்ரெண்டிங் செய்திகள்

எப்படி குளிக்க வேண்டும் 

இது குறித்து நலக்கண்ணாடி சேனலுக்கு அவர் பேசும் போது, “ நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால், தலை முதல் உள்ளங்கால் வரை என, உடல் முழுவதும் நல்லெண்ணெயை தேய்த்து மசாஜ் செய்யுங்கள். கிட்டத்தட்ட அரைமணி முதல் 45 நிமிடங்கள் வரை அந்த எண்ணையோடு இளவெயிலில் நில்லுங்கள். அன்றைய தினம் நிச்சயமாக வெந்நீரில்தான் குளிக்க வேண்டும். 

இல்லை இல்லை.. என்னால் அப்படி உடல் முழுக்க எண்ணெய் தேய்த்து விட்டு நிற்பதெற்க்கெல்லாம் நேரம் இல்லை என்கிறவர்கள்.. உச்சந்தலை, தொப்புள், முட்டிப்பகுதிகள், உள்ளங்கால் உள்ளிட்ட இடங்களில், எண்ணெயை தேய்த்துக்கொண்டு, எண்ணெய் குளியல் எடுக்கலாம். 

இதன் மூலமும் நம்மால் எண்ணெய் குளியல் பயன்களை அடைய முடியும். இந்தக்குளியலின் போது, ஷாம்பு பயன்படுத்தினால் நாள் முழுக்க எண்ணெய் பிசுபிசுப்பு இருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஆகையால் அதற்கு பதிலாக நலங்குமாவு, சீயக்காய், அரப்பு உள்ளிட்ட மூலிகைகளை உடல் முழுக்க தேய்த்து குளிக்கலாம். இப்படி செய்யும் போது உடலில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம். 

எண்ணெய் குளியல் செய்யக்கூடாத நேரங்கள். 

அதிகமாக காய்ச்சல் இருக்கும் போது, பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது, வெளியே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் போது, செரிமான பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் போது நிச்சயமாக எண்ணெய் குளியல் எடுக்கக்கூடாது. அதே போல, எண்ணெய் குளியல் எடுத்த நாளன்று பரோட்டா, பீட்சா, பர்க்கர் என அதிகமாக செரிமான அழுத்தம் தேவைப்படும் உணவுகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். 

இதைத்தவிர பிஞ்சுவகைகள், கரிசாலாங்கன்னி கீரை, பொன்னாங்கன்னி கீரை, கிராம்பு, ஏலக்காய், ஆவியில் வேக வைத்த உணவுகள், ஜாதிக்காய் உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். காலை 6 மணி முதல் 7 மணிக்குள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்துக்குளிக்க வேண்டும். 

இதர நாட்களில் குளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், பசுநெய் மற்றும் தண்ணீர் கலந்து  எண்ணெய் குளியல் எடுக்கலாம் என்று சித்த மருத்துவக்குறிப்பு சொல்கிறது. எண்ணெய் குளியலை பொறுத்தவரை, தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், பசு நெய், மூலிகை எண்ணெய்யையும் நாம் குளியலுக்கு பயன்படுத்தலாம்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.