Obesity on Children: குழந்தைகளில் அதிகரித்து வரும் உடல் பருமன்! உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்ன?
Obesity on Children: "2022 ஆம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட 37 மில்லியன் குழந்தைகள் அதிக எடையுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது அதிக வருமானம் கொண்ட நாடுகளின் பிரச்சினையாகக் கருதப்பட்டாலும், இன்றைய காலக்கட்டத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருந்தது. மருத்துவ துறையின் அதிவேக வளர்ச்சியாலும், அறிவியலின் புதுவிதமான கண்டுபிடிப்புகளாலும் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரித்து விட்டது எனவே கூறலாம். ஆனால் அதிவேக வளர்ச்சியினால் நமது உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் குழந்தைகளில் பரவலாக காணப்படும் உடல் பருமன். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த குழந்தைகளை காட்டிலும் தற்போது உள்ள குழந்தைகளில் உடல் பருமன் கணிசமாக உயர்ந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "2022 ஆம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட 37 மில்லியன் குழந்தைகள் அதிக எடையுடன் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு காலத்தில் அதிக வருமானம் கொண்ட நாடுகளின் பிரச்சினையாகக் கருதப்பட்டாலும், இன்றைய காலக்கட்டத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்காவில், 2000 ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23% அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் அதிக எடை கொண்ட அல்லது உடல் பருமனுடன் வாழ்ந்து வரும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி பேர் ஆசியாவில் தான் இருக்கின்றனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 முதல் 2022 வரை
இது தொடர்பாக நடத்தப்பட்ட கணக்கீட்டின் படி 2022 ஆம் ஆண்டில் 5–19 வயதுடைய 390 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது 1990 இல் வெறும் 8% இலிருந்து 2022 இல் 20% ஆக வியத்தகு முறையில் உயர்ந்துள்ளது.குழந்தைகள் மற்றும் பெண்கள் இருவரிடமும் இந்த அதிகரிப்பு இதேபோல் ஏற்பட்டுள்ளது: 2022 இல் 19% பெண்களும் 21% சிறுவர்களும் அதிக எடை கொண்டவர்களாக இருந்தனர்.