Obesity in children: குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன் பிரச்னை.. தடுக்க எளிய வழிகள் இதோ
Obesity in children: சில ஆரோக்கியமான பழக்கங்களை குழந்தைகளிடம் புகுத்துவதன் மூலம், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வலுவான அடித்தளத்தை வளர்த்துக் கொள்ள உதவும். அத்துடன் மிக முக்கியமாக சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.

சில ஆரோக்கியமான பழக்கங்களை குழந்தைகளிடம் புகுத்துவதன் மூலம், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வலுவான அடித்தளத்தை வளர்த்துக் கொள்ள உதவும். அத்துடன் மிக முக்கியமாக சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.
குழந்தை பருவத்தில் உடல் பருமன் அதிகரிப்பு என்பது குறிப்பாக கோவிட் 19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஒரு குறிப்பிடத்தக்க சுகாதாரப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஊரடங்குகளின் போது நீண்ட நேரம் செயலற்ற நிலையில் இருப்பது மற்றும் டிஜிட்டல் திரை செயல்பாடுகளை நம்பி இருப்பது குழந்தைகள் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் எடை அதிகரித்த குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளை அனுபவிப்பது மட்டுமல்லாமல், சங்கடம் மற்றும் பிற சமூக அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.
எனவே இதை தடுக்க பொறுப்பான பெற்றோராக, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வது குறித்து மருத்துவரின் பரிந்துரைகளை பெற்றோர்கள் பின்பற்றுவது மிக முக்கியம்.
உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை
பெரும்பாலான பெற்றோர்கள் விரைவாகவும் எளிதாகவும் சாப்பிடக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தைகளுக்கும் கொடுப்பது தொடர் கதையாக உள்ளது. அதன்படி துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட, தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்
அதேபோல் நவீன வாழ்க்கை முறையில் குழந்தைகள் தற்போது வெளிப்புற விளையாட்டுகளில் பங்கேற்பதை விட மின்னணு சாதனங்களுடன் விளையாடுவதற்கு அதிக நேரத்தை செவிடுகிறார்கள். டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் அதிக நேரம் இருப்பது உடலில் கொழுப்புகளை அதிகரிக்க செய்கிறது. அத்துடன் டிஜிட்டல் திரையில் நேரத்தை செலவிடுவது குழந்தைகளின் தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போதிய உடல் செயல்பாடு இல்லாத காரணத்தால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பருமனான குழந்தைகள் சந்திக்கும் உடல்நல பிரச்னைகள்
டைப் 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்னைகள் குழந்தைகளுக்கும் அதிகரித்து வருகின்றன. எலும்பியல் நோய்கள், பித்தப்பை பிரச்னை, கல்லீரல் பிரச்னைகள் அதிகரிக்கின்றன. உடல் பருமனாக இருக்கும் குழந்தைகள் சாதாரண குழந்தைகளை விட முன்னதாகவே உடல் ரீதியாக முதிர்ச்சியடையும் போக்கைக் கொண்டுள்ளனர்.
உடல் பருமனை தடுக்கும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வாழ்க்கை முறையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிரபல குழந்தைகள் நல மருத்துவரான பிரசாந்த் பாட்டீல், குழந்தைகளுக்கான உடல் பருமனை தடுக்கும் ஆறு அத்தியாவசிய பழக்கங்களை பார்க்கலாம்
5-3-2-1 ஊட்டச்சத்து விதியைப் பின்பற்றுங்கள்:
- அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த 5 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பது. அதேபோல் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் பொருத்தமான அளவுகளுடன் 3 உணவுகள் பரிமாற வேண்டும்.
- கால்சியம் மற்றும் வைட்டமின் டி தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 2 பால் சார்ந்த பொருட்கள் தரலாம்.
- மிக முக்கியமாக குழந்தைகள் மனநலத்தை பேனி பாதுகாக்க, அவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை தவிர்க்க வாரத்துக்கு ஒரு முறை நன்கு உபசரித்து, ஊக்கப்படுத்த வேண்டும்.
உடல் செயல்பாடுகளை ஊக்குவித்தல்: குழந்தைகள் தினமும் குறைந்தது 60 நிமிடங்கள் மிதமான முதல் தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபட வைக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுதல், நடனம் அல்லது குழு விளையாட்டுகளை விளையாடுவது போன்ற செயல்பாடுகள் உடற்தகுதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சமூக திறன்கள் மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
திரை நேரத்தை வரம்பிடுதல்: IAP (இந்திய குழந்தை மருத்துவ அகாடமி) 2-5 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 1 மணி நேரத்துக்கும் குறைவாகவும், வயதான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 2 மணி நேரத்துக்கும் குறைவாகவும் திரை நேரத்தை கட்டுப்படுத்த பரிந்துரைக்கிறது. அதிகப்படியான டிஜிட்டல் திரை நேரம் உட்கார்ந்த நடத்தை மற்றும் மோசமான உணவு பழக்கங்களுடன் இணைக்கப்படுகிறது.
குடும்ப உணவை ஊக்குவித்தல்: ஒரே குடும்பமாக ஒன்றாக சாப்பிடுவது, கவனத்துடன் சாப்பிடுதல், பகுதி கட்டுப்பாடு மற்றும் சிறந்த உணவு தேர்வுகளை ஊக்குவிக்கிறது. உணவின் போது டிவி அல்லது தொலைபேசிகள் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்.
போதுமான தூக்கத்தை உறுதி செய்தல்: தூக்கமின்மை பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீர்குலைத்து, அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். குழந்தைகள் தங்கள் வயதைப் பொறுத்து ஒரு இரவில் 9-12 மணிநேர தூக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்யவும்.
நேர்மறையான முன்மாதிரியாக இருக்க வேண்டும்: பெற்றோர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது போன்ற ஆரோக்கியமான நடத்தைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதை முன் மாதிரியாகக் கொண்டு, தங்கள் குழந்தைகளை இதே போன்ற பழக்கங்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்