Oats Dosa : கொலட்ஸ்ட்ராலை கட கடன்னு குறைக்கும் ஹெல்தியான ஓட்ஸில் மொறு மொறு தோசை செய்வது எப்படி பாருங்க!
Oats Dosa: ஓட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் ஒரு நபருக்கு இருதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று கனடிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. ஓட்ஸில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் பி 1, மற்றும் இணை கனிமங்கள் அடங்கி உள்ளன.
Oats Dosa: மாறி வரும் வாழ்க்கை சூழலால் சமீப காலமாக நீரிழிவு நோய், உடல் பருமன், கொலஸ்ட்ரால் போன்ற பல நோய்களால் இளம் வயதினரும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதோடு முறையான உடற்பயிற்சியை கட்டாயமாக மேற்கொள்வதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளக்கூடிய பலரும் ஓட்ஸ் எடுத்துக்கொள்வதில் தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர்.
ஓட்ஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் ஒரு நபருக்கு இருதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று கனடிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. ஓட்ஸில் உள்ள சத்துக்கள் மற்றும் அதை எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்
ஓட்ஸில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் பி 1, மற்றும் இணை கனிமங்கள் அடங்கி உள்ளன.
குளுக்கோஸ் கட்டுப்பாடு
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகிறது. தினமும் ஓட்ஸை உணவில் எடுத்துக்கொள்வது நம் ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
ஓட்ஸில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தின் போது கொலஸ்ட்ராலை உறிஞ்சி உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு பக்கவாத அபாயத்தை குறைக்கும்.
எடை குறைப்பு
உங்களின் அதிகப்படியான உடல் எடையை படிப்படியாக குறைக்க விரும்பினால் அதிக நார்ச்சத்து கொண்ட ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதேசமயம் ஓட்ஸ் குறைந்த கலோரிகளை கொண்டது.
மலச்சிக்கல் தீர்வு
ஓட்ஸில் அடங்கி உள்ள பீட்டா குளுக்கான் நம் உடலில் செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதோடு குடல் பாக்டீரியாக்களை பாதுகாக்க உதவுகிறது. இந்த ஓட்ஸ் காலை உணவுக்கு ஓரே மாதிரி எடுப்பதற்கு பதிலாக தோசைஒ, இட்லி போல பல்வேறு வகையாக சமையல் செய்து சாப்பிடலாம். உங்களுக்காக மொறுமொறுன்னு ஓட்ஸ் தோசை எப்படி செய்யலாம் என்று இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1. ஓட்ஸ் - 1/2 கப்
2. உப்பு - தேவைக்கு ஏற்ப
3. சீரகம் - 1/2 டீஸ்பூன்
4. அரிசி மாவு - 1/4 கப்
5. ரவா- 1/4 கப்
6. வெங்காயம் - 2 டீஸ்பூன்
7. கறிவேப்பிலை - சிறிதளவு
8. கொத்தமல்லி - சிறிதளவு
9. இஞ்சி துருவியது - 1/2 டீஸ்பூன்
10. பச்சை மிளகாய் - 1
11. தயிர் - 1/4 கப்
12. தண்ணீர் - தேவைக்கேற்ப
ஓட்ஸ் தோசை தயாரிக்கும் முறை
முதலில் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்த ஓட்ஸ் பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் சீரகம், அரிசி மாவு, ரவா, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், தயிர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
ரவையையும் தோசையை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மாவை 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் தோசை கல்லை அடுப்பில் வைத்து வழக்கம்போல் தோசை ஊற்றி எடுத்து கொள்ளலாம்.
எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பானதும் தோசை எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் தோசை ரெடி
சுவையோடு ஆரோக்கியமும் இணைந்த ஓட்ஸ் தோசையை சமைத்து ஒரு பிடி பிடியுங்கள். உங்கள் கலோரி அளவு அதிகரிக்காது. அப்புறம் என்ன.. மகிழ்ச்சியாக தோசை செய்ய தயார் ஆகுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்