தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Nuts And Seeds A Handful Of These Every Day Is Enough Your Health Will Do Wonders

Nuts and Seeds : இதை ஒரு கைப்பிடி தினமும் எடுத்தால் போதும்! உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அற்புதம் நேரும்!

Priyadarshini R HT Tamil
Jan 21, 2024 12:30 PM IST

Nuts and Seeds : இதை ஒரு கைப்பிடி தினமும் எடுத்தால் போதும்! உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அற்புதம் நேரும்!

Nuts and Seeds : இதை ஒரு கைப்பிடி தினமும் எடுத்தால் போதும்! உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அற்புதம் நேரும்!
Nuts and Seeds : இதை ஒரு கைப்பிடி தினமும் எடுத்தால் போதும்! உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அற்புதம் நேரும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இதய ஆரோக்கியம்

ஹார்வர்டு ஆராய்ச்சிகளின் ஆராய்ச்சியில், தினமும் 28 கிராம் நட்ஸ்களை சாப்பிட்டாலே 21 சதவீதம் இதய கோளாறுகள் ஏற்படுவதை அது தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரே ஒரு கைப்பிடியளவு நட்ஸ் எடுத்து உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

எடை மேலாண்மைக்கு உதவுகிறது

உங்கள் உணவில் நட்ஸ் சேர்த்துக்கொள்வது எடையை சரியாக பராமரிக்க உதவுகிறது. இதை சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். அதனால் அடிக்கடி பசியை ஏற்படுத்தி, ஏதேனும் சாப்பிடவேண்டும் என்ற உணர்வை கொடுக்காது. இதனால் குறைவாகவே சாப்பிட முடியும். அதிகம் சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது.

ரத்த சர்க்கரை கட்டுப்பாடு

நட்ஸ்கள் மற்றும் விதைகள், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சாப்பிடாமல் இருக்கும்போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. கிளைசமிக்கை கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் உணர்திறனாகிறது. அது உங்கள் இனிப்பு சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்துகிறது. எனவே தினமும் ஒரு கைப்பிடியளவு நட்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.

பசியை கட்டுப்படுத்துகிறது

உங்கள் உணவில் நட்ஸ்களை சேர்த்துக்கொள்வதால், வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கிறது. நட்ஸ்கள், உடல் எடையை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலில் சக்தியை சமப்படுத்துகிறது. வயிறு நிறைந்த திருப்தியை நட்ஸ்கள் கொடுக்கிறது. பசியை குறைக்கிறது. இது ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக் ஆகிறது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

நட்ஸ்கள் மற்றும் விதைகள் ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்றுதான் கூறவேண்டும். இது புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இவை உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

ஆன்டி ஆக்ஸ்டன்ட்கள் நிறைந்தது

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆரோக்கியத்தை வழங்கும் இதில், ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நன்மைகிடைப்பதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கிறது

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதய நோய்களை தவிர்க்க நட்ஸ்களை உங்களின் வழக்கமான உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்தது

நல்ல கொழுப்பு குறித்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். நட்ஸ்களில் மோனோசேச்சுரேடட் மற்றும் பாலிசேச்சுரேடட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு இதமானது. எனவே நீங்கள் ஸ்னாக்ஸாக உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளாமல் இதை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளது

முக்கிய வைட்டமின்களும், மினரல்களும் நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகளவு உள்ளது. எனவே இதை கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் ஈ முதல் வைட்டமின் பி6 மற்றும் நியாசின் வரையும், ஃபோலேட், மெக்னீசியம், சிங்க் மற்றும் பொட்டாசிய சத்தும் நிறைந்துள்ளது. இந்த ஸ்னாக்ஸ்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்