உங்கள் வாழ்க்கையையே மாற்றும் இந்தப் பழக்கங்கள் - ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன?
உங்கள் வாழ்க்கையை மாற்றும் உணவுக்கட்டுப்பாடு திட்டம் என்னவென்று ஊட்டச்சத்து நிபுணர் கூறுவது என்ன?

உங்களின் உடல் எடை குறைப்பு பயணத்தில் வெற்றி பெறவேண்டுமெனில் நீங்கள் சரியான அளவு உணவு உட்கொள்ளவேண்டும். இது உடலுக்கு ஊட்டமளிக்கிறது. உங்களின் கடும் உடற்பயிற்சிகளுக்கு உதவுகிறது. உடல் எடை குறைப்பு பயணம் என்பது உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றம் என அனைத்தும் நிறைந்ததாக இருக்கவேண்டும். புரதம் அகிதம் எடுத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரையை குறைக்கவேண்டும். டாக்டர் ரேச்சல் பால் என்ற ஊட்டச்சத்து நிபுணர், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 உடல் எடைக்குறைப்பு பழக்கங்கள் தனது வாழ்க்கையையே மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
புரதம் அதிகம் எடுக்கவேண்டும்
புரத உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். டாக்டர் பால் கூறுகையில், ‘புரதம் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலைக்கொடுக்கிறது. நீங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்யவும் உதவுகிறது. புரதம் பசியைப் போக்குகிறது. புரதம்தான் வயிறு நிறைந்த உணர்வையும், ஆற்றலையும் கொடுக்கும். முட்டை, சிக்கன், பீஃப், சால்மன் என நீங்கள் உங்கள் உணவில் அதிகம் சேர்க்கவேண்டும்’ என்றார்.