அவகேடோவில் உள்ள சத்துக்கள் : அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சத்துக்கள் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அவகேடோவில் உள்ள சத்துக்கள் : அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சத்துக்கள் என்ன தெரியுமா?

அவகேடோவில் உள்ள சத்துக்கள் : அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சத்துக்கள் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Published Mar 16, 2025 01:47 PM IST

அவகேடோவில் உள்ள சத்துக்கள் : அவகேடோ பழத்தில் உள்ள சத்துக்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதனால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் பாருங்கள்.

அவகேடோவில் உள்ள சத்துக்கள் : அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சத்துக்கள் என்ன தெரியுமா?
அவகேடோவில் உள்ள சத்துக்கள் : அவகேடோ பழத்தில் உள்ள ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சத்துக்கள் என்ன தெரியுமா?

ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம்

அவகேடோ பழங்களில் மோனோ சாச்சுரேடட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மையைத் தருகிறது. உடலில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

100 கிராம் அவகேடோவில் 7 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. குடலில் ஆரோக்கியமான நுண்ணுயிர்கள் வளர காரணமாகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

இதில் அதிகப்படியாக உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் இரண்டும் உங்களுக்கு நீண்ட நாட்கள் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. அதனால் அவகேடோக்கள் சாப்பிட்ட பின்னர் நீங்கள் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க முடிகிறது. உங்கள் ஆரோக்கிய சரிவிகித உணவில் அவகேடோவுக்கு எக்போதும் ஒரு இடம் இருக்கட்டும். இதனால் உங்களால் உடல் எடையை கட்டுக்குள் வைத்து வெற்றிகரமாக பராமரிக்க முடியும்.

அவகேடோவில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள், ரத்த சர்க்கரை அதிகரிப்பதைக் தாமதப்படுக்கிறது. இன்சுலின் சென்சிட்விட்டியை அதிகரிக்கிறது. இது நீரிழிவு நோயை பராமரிக்க உதவுகிறது. இது சரிவிகித உணவின் அங்கமாக உள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

அவகேடோவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. லுட்டின், ஸியான்ஸான்தின் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கண்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது. இவை கடும் புறஊதாக் கதிர்களிடம் இருந்து கண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கிறது. இது கண்புரை ஏற்படாமல் தடுக்கும் சத்துக்கள் ஆகும். ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்துக்கும் இந்த சத்துக்கள் தேவை.

ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட்

அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இந்த சத்துக்கள் மூளையில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. இது நரம்பியல் நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. அல்சைமர் போன்ற நோய்களை இந்த சத்துக்கள் தடுக்கிறது.

பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்தது

அவகேடோவில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ஹெச்டிஎல் என்ற நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை இந்தச் சத்துக்கள் குறைக்கிறது.

வைட்டமின்கள்

அவகேடோவில் 2.1 மில்லி கிராம் வைட்டமின் ஈ, 10 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் 14.7 கிராம் ஆரோக்கிய கொழுப்புக்களும் உள்ளது. இந்த சத்துக்கள் சருமத்துக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இது கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. தலைமுடியை வலுப்படுத்துகிறது. இயற்கை அழகை தலைமுடிக்கு கொடுக்கிறது.

வைட்டமின் சி, ஈ மற்றும் பி6 சத்துக்கள்

அவகேடோவில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் பி6 சத்துக்கள் உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. இது வீக்கத்தை தடுக்கிறது, உங்கள் உடல் நோயை எதிர்த்து போராட உதவுகிறது.

செரிமான எண்சைம்கள்

அவகேடோவில் செரிமான எண்சைம்கள் அதிகம் உள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. வயிறு உப்புசத்தைத் தடுக்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதனால் செரிமானமின்மை மற்றம் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.