தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Nurturing Your Bones In The Winter Season

Bones: குளிர்காலத்தில் எலும்பில் வலி வருகிறதா? - செய்யவேண்டியவை இதுதான்!

Marimuthu M HT Tamil
Jan 11, 2024 05:52 PM IST

குளிர்காலம் நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இந்த பருவத்தில் எலும்புகளை வலுவாக வைத்திருக்க சில யோசனைகள் பற்றி அறிவோம்.

வைட்டமின் டி, ஒமேகா -3 மற்றும் சமச்சீர் உணவு ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்யும் திறவுகோலாகும்
வைட்டமின் டி, ஒமேகா -3 மற்றும் சமச்சீர் உணவு ஆகியவை எலும்பு ஆரோக்கியத்தை உறுதி செய்யும் திறவுகோலாகும்

ட்ரெண்டிங் செய்திகள்

 சூரிய ஒளியில் நில்லுங்கள்: சூரிய ஒளியின் வெளிப்பாடு குளிர்காலத்தில் வைட்டமின் டி அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான கால்சியத்தினைப் பெற சூரிய ஒளி உதவுகிறது. குளிர்கால வெயிலில் நடைபயிற்சி செய்வது வைட்டமின் டி அளவை அதிகரிக்க உதவுகிறது.

சரிவிகித உணவு: சரியான ஊட்டச்சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு உதவுகின்றன. பால் பொருட்கள், கீரைகள் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே ஆகியச்சத்துக்கள், எலும்பு வலிமையை உறுதி செய்கின்றன.

நீர்ச்சத்து: உடலில் நீர்ச்சத்தினை தக்க வைப்பதை மறக்காதீர்கள். நீர் உங்கள் உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல உதவுகிறது. மூட்டு மற்றும் எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உங்களுக்கு தாகம் இல்லாவிட்டாலும், போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்: உடற்பயிற்சியை முற்றிலுமாக புறக்கணிக்கக்கூடாது. குளிர்கால குளிர் காரணமாக உங்களால் வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டிலேயே, யோகா மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகளை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவை எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடற்பயிற்சி மற்றும் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க உதவுகின்றன.

உடற்பயிற்சிக்கு முன் வார்ம்அப்:  குளிர் காலத்தில் தசைகளின் தன்மையினால் காயங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, காயம் மற்றும் சுளுக்குகளைத் தடுக்க சரியான வார்ம்-அப் முக்கியம். நமது தசைகள் சரியான உடற்பயிற்சி அமர்வுக்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த, உடல் செயல்பாடுகளுக்கு நம் உடலைத் தயார் செய்ய, ஒருவர் சில கூடுதல் நிமிடங்கள் வார்ம்-அப்புக்கு செலவிட வேண்டும்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்: அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன. கொழுப்பு நிறைந்த மீன் (சால்மன், கானாங்கெளுத்தி), சியா விதைகள் மற்றும் வால்நட்கள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களுக்கு ஏற்றது. இவை எலும்பு அடர்த்தியை ஆதரிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.

ஆரோக்கியமான உடல் எடை தேவை: அதிகப்படியான உடல் எடை உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளை சோர்வடையச் செய்து, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் உதவியுடன், ஒருவர் எடையை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும். இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இவை எலும்பு உடையும் அபாயத்தைக் குறைக்கின்றன. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்