தினம் தினம் இனி திண்டுக்கல் பிரியாணி வீட்டிலே சாப்பிடலாம்; இதோ இந்த மசாலாப் பொடி போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினம் தினம் இனி திண்டுக்கல் பிரியாணி வீட்டிலே சாப்பிடலாம்; இதோ இந்த மசாலாப் பொடி போதும்!

தினம் தினம் இனி திண்டுக்கல் பிரியாணி வீட்டிலே சாப்பிடலாம்; இதோ இந்த மசாலாப் பொடி போதும்!

Priyadarshini R HT Tamil
Dec 29, 2024 04:49 PM IST

திண்டுக்கல் பிரியாணியை இனி வீட்டிலே ருசிக்கலாம். இதோ ரகசியம்.

தினம் தினம் இனி திண்டுக்கல் பிரியாணி வீட்டிலே சாப்பிடலாம்; இதோ இந்த மசாலாப் பொடி போதும்!
தினம் தினம் இனி திண்டுக்கல் பிரியாணி வீட்டிலே சாப்பிடலாம்; இதோ இந்த மசாலாப் பொடி போதும்!

திண்டுக்கல் பிரியாணி மசாலாப்பொடி செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

பட்டை – 10 கிராம்

கிராம்பு – 2 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

செய்முறை

முதலில் இதை எடுத்து தனியாகப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப்பொடியை வைத்து ஒரு கிலோ பிரயாணி தயாரிக்க முடியும்.

திண்டுக்கல் பிரியாணிக்கு தேவையான நிறம், மணம் மற்றும் சுவை மூன்றையும் கொடுப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

மராத்தி மொக்கு – 5 கிராம்

கல்பாசி – 2 கிராம்

இவையிரண்டையும் தனியாகப் பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

செய்முறை

வழக்கம்போல் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு பிரயாணி பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து முழு கரம் மசாலாக்கள் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் என அனைத்தும் சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து வெங்காயம், தக்காளி சேர்த்து நல்ல பொன்னிறமாக குலைந்து வரும் வரை வதக்கவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்து கொஞ்சமாக கரம் மசாலா சேர்த்து வதக்கவேண்டும். மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவேண்டும். தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து மட்டன் அல்லது சிக்கன் சேர்த்து கொதிக்கவிட்டு, அரிசி சேர்த்து, பொடித்து வைத்துள்ள இரண்டு ஸ்பெஷல் திண்டுக்கல் மசாலாவை சேர்த்து பிரியாணியை செய்து இறக்கினால். சூப்பர் சுவையான திண்டுக்கல் பிரியாணி தயார். இதுதான் திண்டுக்கல் பிரியாணிக்கு தனி மணம் கிடைக்க காரணம்.

குறிப்புகள்

பிரியாணி நன்றாக கொதி வந்த பின்னர்தான் மல்லிப்பொடி தூவவேண்டும். இந்த ஒரு மசாலாப்பொடி போதும் தினம், தினம் இனி திண்டுக்கல் பிரியாணிதான். வீட்டிலே செய்யலாம் ஈசியா. அனைவரும் விரும்பும் சுவையில் இருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் போட்டிபோட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.