நாவல் பழம் மட்டும் இல்லங்க.. இலையும் அற்புதம் நிகழ்த்தும்.. தினமும் இரவில் நாவல் இலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
இயற்கையில் நமக்குப் பயன்படும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் தினமும் இரவில் நாவல் இலைகளை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

பொதுவாக நாம் பருவ காலங்களில் நாவல் பழத்தை விரும்பி எடுத்து கொள்கிறோம். ஆனால் நாவல் பழத்தை பொறுத்த மட்டில் அதன் பழம் மட்டும் அல்லாமல் இலை கூட மருத்துவ குணங்கள் அடங்கியது. கற்பக பழமாக கருதப்படுவதும் நாவல் பழம். அதன் இலைகளை தினமும் இரவில் எடுத்துகொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல நன்மைகளை கொண்டது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக செரிமானத்தை மேம்படுத்தவும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் நாம் நாவல் பழ ஜூஸ் அல்லது நாவல் கேப்ஸ்யூல்களை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நாவல் மர இலைகளையும் பயன்படுத்தலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. தினமும் நாவல் இலைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
நாவல் இலையில் உள்ள சத்துகள்
நாவல் பழத்தை போன்றே நாவல் இலையிலும், புரதச்சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி உள்ளன.