ஆரோக்கியம் மட்டுமல்ல; அழகையும் அள்ளித்தரும் முருங்கை! சருமத்துக்கு இந்த 5 நன்மைகளைச் செய்கிறது!
முருங்கைக்கீரை உங்கள் சருமத்துக்கு என்ன செய்கிறது பாருங்கள்.
உங்களுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் முருங்கைக்கீரை அள்ளித்தருகிறது. தெளிவான சருமத்தைப் பெற இந்தக் கீரையை நீங்கள் பயன்படுத்தலாம். முருங்கை என்பது ஒரு மாய மரம் என்றே கூறலாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்துக்குப் பொலிவைத்தரும் உட்பொருட்கள், வயோதிகத்தைத் தடுக்கும் திறன் என எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஆற்றல் கொண்டது. இது வயோதிகத்தை எதிர்த்துப் போராடுகிறது. இது இயற்கை குணங்கள் கொண்டது. இது உங்களின் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சரும பளபளப்பு மற்றும் இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கு நீங்கள் முருங்கைக் கீரையை எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும், அதன் பலன்கள் என்னவென்றும் பாருங்கள்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்றவை உள்ளது. இது உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்களை முறைப்படுத்துகிறது. ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து சருமத்தைக் காக்கிறது. வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலில் கொலாஜென்களை அதிகரிக்கிறது. சருமத்தின் நெகிழ்தன்மையைக் கூட்டுகிறது. வைட்டமின் ஈ சத்துக்கள் உங்கள் உடலுக்கு ஊட்டமளிக்கிறது. உங்களுக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. உங்கள் பல்வேறு சரும தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இதன் பல வைட்டமின் உட்பொருட்கள் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.
உங்கள் சருமத்துக்கு இளமை தோற்றத்தைக் கொடுக்கிறது
கொலாஜென்கள்தான் சருமத்தில் இறுக்கத்தை அதிகரித்து சுருக்கத்தைக் கொடுத்து, சருமத்துக்கு இளமை தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆனால் வயது ஆக இது குறையும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். இதனால் சருமம் தொங்க துவங்கும். முருங்கைக்கீரையில் உள்ள அதிக வைட்டமின் ஏ மற்றும் அமினோஅமிலங்கள் உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது செல்களை புதுப்பிக்கிறது. சுருக்கங்களைப் போக்குகிறது. தோலை இறுக்கமாக்கி, பளபளப்பையும், சருமத்துக்கு இளமை தோற்றத்தையும் கொடுக்கிறது.
நீர்ச்சத்துக்கள்
வறண்ட சருமத்தில் நெகிழ்தன்மை இருக்காது. முருங்கைக்கீரையில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், எரிச்சலுக்கு இதமளிக்கும். சருமம் சிவப்பதைக் குறைக்கும். சுற்றுச்சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தும். குணப்படுத்தும் திறனுக்கு ஆதரவு தரும். மேலும் சேதமடையாமல் தடுக்கும். குறிப்பாக முதிர்ந்த மற்றும் இலகுவான சருமத்துக்கு, இளமை தோற்றத்தைக் கொடுக்கும்.
சருமத்துக்கு புத்துயிர் கொடுக்கும்
முருங்கைக்கீரையில் உள்ள கழிவுநீக்க குணங்கள், அழுக்குகளை நீக்கும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சரிசெய்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். இதன் வைட்டமின்கள் சருமத்துக்கு தெளிவு, பிரகாசம், பொலிவு மற்றும் உயிர்சக்தியைக் கொடுக்கும். உங்கள் சருமத்தை புத்துணர்வுடன் இருக்கச் செய்யும். உங்கள் சருமத்துக்கு புத்துயிர் கொடுத்து, உங்களுக்கு இளமை தோற்றத்தைக் கொடுக்கும்.
உங்கள் சருமத்துக்கு முருங்கையை எப்படி பயன்படுத்தலாம்?
நீங்கள் ஆரோக்கியமான, தெளிவான, பளபளக்கும் சருமம் பெற முருங்கையை எண்ணற்ற வழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் சருமத்துக்கு தேவையான பொலிவைக் கொடுக்கும்.
முருங்கைக்கீரையை அரைத்து வடிகட்டி, அந்த நீரை ஸ்பிரே பாட்டிலில் அடைத்து , ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு, அதை தேவைப்படும்போது சருமத்தில் அடித்து உங்கள் சருமத்துக்கு புத்துயிர் கொடுக்கலாம்.
முகப்பருக்களை நீக்க உதவுகிறது
முருங்கைக்கீரை சாற்றை வெறும் வயிற்றில் பருகலாம். இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் சரும எரிச்சல் மற்றும் சிவத்தலைப்போக்கும்.
சூரிய கதிர்களால் ஏற்படும் தடங்களைப் போக்கும்
முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளது. இது செல்களை புத்துயிர் பெறச்செய்கிறது. கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. செரிமானத்தை தூண்டி, உடலில் வாதம், பித்தம், கபம், ஹார்மோன்கள் போன்றவற்றின் சமநிலையின்மைகளைத் தடுக்கிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்