Noolkol Chutney : கண் பார்வையை கூராக்கும் நூல்கோல்! பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் செயயலாம் சட்னி!-noolkol chutney noolkol sharpens your eyes chutney can be made so that even those who dont like it like it - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Noolkol Chutney : கண் பார்வையை கூராக்கும் நூல்கோல்! பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் செயயலாம் சட்னி!

Noolkol Chutney : கண் பார்வையை கூராக்கும் நூல்கோல்! பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் செயயலாம் சட்னி!

Priyadarshini R HT Tamil
Aug 27, 2024 04:29 PM IST

Noolkol Chutney : கண் பார்வையை கூராக்கும் நூல்கோல், பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் செயயலாம் சட்னி. இதுபோல் செய்தால் நன்றாக இருக்கும்.

Noolkol Chutney : கண் பார்வையை கூராக்கும் நூல்கோல்! பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் செயயலாம் சட்னி!
Noolkol Chutney : கண் பார்வையை கூராக்கும் நூல்கோல்! பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடும் வகையில் செயயலாம் சட்னி!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

பூண்டு – 5 பல்

இஞ்சி – ஒரு இஞ்ச்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

நூல்கோல் – 1 (தோல் சீவி பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

வர மிளகாய் – 2

தேங்காய் துருவல் – கால் கப்

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து கடலைப்பருப்பு, உளுந்து, சீரகம் சேர்த்து சிவந்ததும். அதனுடன் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், நூல்கோல், வரமிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

அவற்றை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதை அரைத்த சட்னியில் சேர்க்கவேண்டும். சூப்பர் சுவையில் நூல்கோல் சட்னி தயார்.

நூல்கோலில் உள்ள சத்துக்கள்

100 கிராம் நூல்கோலில் 27 கலோரிகள் உள்ளது. புரதம் 1.7 கிராம், கார்போஹைட்ரேட்கள் 6.2 கிராம், நார்ச்சத்துக்கள் 3.6 கிராம், கால்சியம் 24 மில்லி கிராம், மெக்னீசியம் 19 மில்லி கிராம், பாஸ்பரஸ் 46 மில்லி கிராம், பொட்டாசியம் 350 மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம், வைட்டமின் சி 62 மில்லி கிராம், பீட்டா கரோட்டின், ஃபோலேட் ஆகிய சத்துக்கள் உள்ளன.

நூல்கோலில் உள்ள நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்தது.

கண் பார்வையை கூராக்குகிறது.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

குறிப்புகள்

நூல்கோலை ஓடும் தண்ணீரில் முழுவதும் நன்றாக கழுவிவிடவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு அதில் உள்ள அழுக்குகள், மண் மற்றும் உரங்கள் ஆகியவை நுங்கும். அதில் உள்ள கெட்டியான தோலை நீக்கிவிடவேண்டும். சிறிய நூல்கோல் இனிப்பாக இருக்கும்.

நூல்கோல் உருண்டையாக இருக்கும். இது முட்டைக்கோஸ் வகை குடும்பத்தைச் சார்ந்த காய்கறியாகும். இதன் தோற்றமும் முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலியை ஒத்திருக்கும். இது கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய காய்கறியாகும். இந்த காயில் உள்ள அனைத்து பாகங்களையும் சாப்பிடலாம். தண்டு, வேர், காய் என அகைத்தையும் சாப்பிடலாம். இதில் கலோரிகள் குறைவாக இருக்கும். சூப் செய்ய ஏற்றது. இதை வறுத்தும் சாப்பிடலாம். இது முள்ளங்கியின் சுவையைப்போல் இருக்கும். ‘

இந்த காய் டர்னிப்பின் தோற்றத்தை ஒத்திருப்பதால், இதை ஜெர்மனியின் டர்னிப் என்று அழைப்பார்கள். இது பெசிகா ஒலேராசியா என்பது இதன் அறிவியல் பெயர். இது காய்கறி கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். இது ஜெர்மானிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியாவில் இதன் பயன்பாடு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவில் மிதமான அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியில் கொலரபி என்று அழைக்கப்படும் நூல்கோலில் வறுவல், சாலட், கிரேவி என செய்து அசத்தமுடியும். ஒடிசாவில் இது கன்டி கோபி என்றும், காஷ்மீரில் மான்ஜி என்றும், தென்னிந்தியாவில் நூல்கோல் என்றும், மஹாராஷ்ட்ராவில் நவகோல் என்றும், சுஹாஓ என பெங்காலியிலும் அழைக்கப்படுகிறத. இதை சமைப்பது எளிது.

பக்கவிளைவுகள்

நூல்கோல் ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதில் உள்ள தியோசியானேட்கள் அயோடின் உறிஞ்சுவதை தடுக்கும். தைராய்ட்டு உள்ளவர்கள் இதை சாப்பிடுவதற்குமுன் மருத்துவரின் பரிந்துரையைப் பெறவேண்டும். இது சில நேரங்களில் தைராய்டு மாத்திரைகளுடன் வினைபுரியக்கூடியது.

அதிகம் சாப்பிட்டால் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும். அதிகம் சாப்பிட்டால் இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் வயிறு உப்புசம், வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.