Non Communicable Disease : தமிழகம் சந்திக்கும் தொற்றா நோய்களின் பிரச்னைகள் – அதிர்ச்சி ஆய்வு! மருத்துவர் எச்சரிக்கை!
Non Communicable Disease : தமிழகம் சந்திக்கும் தொற்றா நோய்களின் பிரச்னைகள் – அதிர்ச்சி ஆய்வு! மருத்துவர் எச்சரிக்கை!
2016ம் ஆண்டு லேன்செட் மருத்துவ ஆய்வுக் கட்டுரையில், இந்தியாவைக் காட்டிலும் தமிழகத்தில் தொற்றா நோய்களின் இறப்பு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதய நோய்களின் காரணமாக இறப்பு
இந்தியா - தமிழகம்
132/1000 பேருக்கு - 208/1000 பேருக்கு
சர்க்கரை நோய் இறப்பு -
இந்தியா -தமிழகம்
23/1000 பேர் - 53 /1000 பேர்
நாள்பட்ட சிறுநீரக பிரச்னை காரணமாக இறப்பு -
இந்தியா - தமிழகம்
18/1000 பேர் -35/1000 பேர்
என அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் தற்போதைய தொற்றா நோய்களின் பாதிப்பை கண்டறிந்து, அதை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை அனைத்து மாவட்டங்களிலும், STEPS-2 ஆய்வை விரைவில் மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் 2020ல் மேற்கொள்ளப்பட்ட STEPS ஆய்வில்,
ரத்தக்கொதிப்பு – 33.9 சதவீதம்
சர்க்கரை நோய் – 17.6 சதவீதம் பேர்
பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதில், 7.3 சதவீதம் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் மற்றும் 10.8 சதவீதம் சர்க்கரை நோயாளிகள் சிகிச்சையின் காராணமாக நோய் கட்டுப்பாட்டில் இருந்தது.
அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ள STEPS -2 ஆய்வு, மாவட்டங்களில் உள்ள பாதிப்பு புள்ளிவிவரங்களை திரட்டி, காரணங்களை கண்டறிந்து அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்படவுள்ளது.
உலக வங்கி நிதியுடன், தொற்றா நோய்கள் குறித்து 3 வித தரவுகளை சேகரிக்க, தமிழகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
சமூக-பொருளாதார-மக்கள் தொகை குறித்தான தரவுகள்
உணவு பழக்கவழக்கங்கள்-புகைத்தல், மது அருந்துதல், உடற்பயிற்சி செய்யும் அளவு, அதிக கொழுப்பு/உப்பு உணவுகளின் பயன்பாடு
ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு - இவற்றை அளப்பது.
என்பது செய்யப்பட உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் திறம்பட கட்டுக்குள் வைப்பது போன்றவை திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உள்ள சிகிச்சையின் காரணமாக கட்டுபாட்டில் உள்ள ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் STEP-2ல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்திய மருத்துவ பணிகளின் இயக்குநர் மருத்துவர். அதுல் கோயல் அனைத்து மருத்துவக் கல்லூரி உணவகங்களில் அதிக கொழுப்பு/உப்பு/சர்க்கரை நிறைந்த உணவுகளுக்குப் பதில் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், உமி நீக்கப்படாத தானியங்கள் உள்ள உணவுகளை விற்க அறிவுறுத்தியுள்ளது.
நோய் தவிர்க்கும் உணவுமுறை மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவராமல், தொற்றா நோய்களின் பாதிப்பை குறைக்க முடியுமா? எனும் கேள்வி எழுவதுடன் தமிழக அரசின் தொற்றா நோய்கள் குறித்தான புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் பணி எதிர்பார்க்கும் பலனை அளிக்குமா?
குறிப்பாக, இளைஞர் சமுதாயம், மென்திரவங்களுக்குப் பதிலாக இளநீர், பழச்சாற்றை பருகுவதை மக்கள் இயக்கமாக மாற்றாமல் உரிய பலன் கிட்டுமா?
புகைப்பதையும், மது அருந்துவதையும் மருத்துவர்கள் தவிர்க்க முன்வருமாறு திட்டங்கள் தீட்டப்படுமா? மருத்துவ கருத்தரங்குகளில் மது தவிர்க்கப்படுவது கட்டாயமாக்கப்படுமா?
தமிழகத்தில் மது விற்பனை மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ. 44,000 கோடி வருமானம் கிடைப்பதை குறைக்க மக்களின் சுகாதார பாதிப்பை கருத்தில்கொண்டு அரசு நடவடிக்கைகள் எடுக்குமா?
சிறுதானியங்களின் பயன்பாடு தொற்றா நோய்களை வெகுவாகக் குறைக்கும் என இருந்தும் அரிசி/கோதுமைக்குப் பதில் அவற்றை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வருமா?
உணவில், நொறுக்குத்தீனிகளில் உப்பின் அளவு, நாள் ஒன்றுக்கு 5 கிராமிற்கு மிகாமல் இருக்க அரசு நடவடிக்கைகள் எடுக்குமா?
அனைவருக்கும் வேலை (ஊதியத்தில் குறைந்தபட்சக் கூலி,ஊதியத்தில்ஆண்/ பெண் பாகுபாடின்மை), உழைப்பிற்கேற்ற ஊதியம், அடிப்படைத் தேவைகளை (உணவு, நீர், இருப்பிடம்) நிறைவேற்றி மக்கள் மனஅழுத்தமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுமா?
அனைவரும் நாள் ஒன்றுக்கு 4,000 அடிகள் நடந்து உடற்பயிற்சி செய்வதை அரசு உறுதிபடுத்துமா?
(8 கி.மீ. நடைபாதைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஏற்படுத்த முனைவது சரியா?)
மேற்சொன்னவற்றை நடைமுறைப்படுத்தாமல், வெறும் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் பணியை மட்டும் தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டால், தமிழகத்தில் அதிகரித்து வரும் தொற்றா நோய்களின் பாதிப்பை உண்மையிலேயே கட்டுப்படுத்த முடியுமா?
(அறுவை சிகிச்சைக்கு முன்னர் 1 நாள் கிருமிக்கொல்லி (அதுவும் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவது) கொடுப்பதே அறிவியல் ரீதியாக போதுமானது என்பதை ICMR இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வலியுறுத்தினாலும், நடைமுறையில் 55 சதவீதம் கிருமிக்கொல்லிகள் நோய் பாதிப்பின்றி, நோய்களை தடுக்க மட்டும் கொடுக்கும் தவறான பழக்கம் இந்தியா முழுக்க உள்ளது.
அறிவியல் ரீதியான நோய்தடுப்பு நடவடிக்கைகள், தொற்றா நோய்களின் தடுப்பில் நம்மை வழிநடத்தட்டும்.
நன்றி – மருத்துவர் புகழேந்தி.
டாபிக்ஸ்