தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  No Smoking Day 2024 Regular Smoker Struggling To Let Go These Tips Will Help You

No Smoking Day 2024 : தொடர்ந்து புகைப்பிடிப்பவரா? விட முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்!

Priyadarshini R HT Tamil
Mar 13, 2024 03:45 PM IST

No Smoking Day 2024 : உங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு ஒரு காலத்தை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட்களின் எண்ணிக்கையை குறையுங்கள். ஒவ்வொரு நாளும் கட்டாயம் அதை கடைபிடியுங்கள்.

No Smoking Day 2024 : தொடர்ந்து புகைப்பிடிப்பவரா? விட முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்!
No Smoking Day 2024 : தொடர்ந்து புகைப்பிடிப்பவரா? விட முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவும்!

ட்ரெண்டிங் செய்திகள்

திட்டமிங்கள், உங்கள் கடைசி சிகரெட்டை புகையுங்கள்

நீங்கள் புகைக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என்று ஒரு நாளை குறிப்பிட்டு, அன்று முதல் கட்டாயம் புகைப்பதை நிறுத்துங்கள். உங்களை தயார்படுத்திக்கொள்வதற்கு ஒரு காலத்தை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட்களின் எண்ணிக்கையை குறையுங்கள். ஒவ்வொரு நாளும் கட்டாயம் அதை கடைபிடியுங்கள்.

அந்த எண்ணத்தை கைவிட்டு உங்களை எப்போதும் வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்

உங்களுக்கு சிகரெட் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்போது, உங்களை பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்களை மகிழ்விக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். குடும்பத்தினருடன் பொழுதை கழியுங்கள். உங்களை தொடர்ந்து பிஸியாக வைத்திருப்பதன் மூலம் நீங்கள் புகைப்பிடிக்கும் எண்ணத்தை கைவிடலாம்.

காரணம் கூறுங்கள்

நீங்கள் புகைக்கும் பழக்கத்தை ஏன் விடவேண்டும் என்ற காரணத்தையும் கூறுங்கள். உங்கள் ஆரோக்கியம், பொருளாதாரம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தை உங்களிடம் கூறுங்கள். உங்களை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள். ஆனால் நீங்கள் புகைக்கும் பழக்கத்தை கைவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

எந்த ஒரு தூண்டுதலையும் தவிருங்கள்

புகைக்கக்கூடிய சூழல்களை கண்டுபிடித்து தவிருங்கள். உங்களை புகைபிடிக்க சில சூழல்கள் தூண்டும். அவை சில இடங்களாக இருக்கலாம். நபர்களாக இருக்கலாம். அவற்றில் எல்லாம் இருந்து விலகியிருங்கள்.

புகையை மறக்க வேறு கெட்ட பழக்கத்திற்கு ஆளாகாதீர்கள்

புகைப்பிடிக்கும் பழக்கத்தை மறப்பதற்கு வேறு கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகிவிடாதீர்கள். புகையிலை, கூல் லிப் போன்றவற்றை பயன்படுத்துவது தீர்வல்ல. ஒட்டுமொத்த கெட்ட பழக்கத்தையும் கைவிடுவதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

சூவிங்கம் சாப்பிட்டோ அல்லது வேறு ஸ்னாக்ஸ்கள் ஏடுத்தோ அதை மாற்றுங்கள்

உங்களுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், அதை மாற்றுவதற்கு, உங்கள் வாயில் எதையாவது மென்றுகொண்டிருங்கள். அதற்கு சர்க்கரை இல்லாத பபுள்கம் சுவைக்கலாம் அல்லது வேறு ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிடலாம்.

ஒரு இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்

உங்கள் வழக்கமான பணிகளில் இருந்து கொஞ்சம் விலகியிருங்கள். எங்காவது சுற்றுலா சென்று வாருங்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். உங்களுக்கு பரிட்சையமான சூழலில் இருந்து, விலகியிருங்கள். அதுவும் உங்களை புகைபிடிக்க தூண்டாது.

மற்ற விஷயங்கள் செய்வதில் மகிழ்ந்திருங்கள்

பழக்கவழக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளை உங்களுக்கு மகிழ்ச்சியைக்கொடுப்பவற்றை செய்ய வேண்டும். அது புத்தகங்கள் வாசிப்பது, புதிய ஹாபியை பழக்கிக்கொள்வது, இயற்கையோடு கரைந்துபோவது, புகைக்கும் பழக்கத்துக்கு மாற்றுக்களை கற்றுக்கொள்வது.

வெகுமதியை தேர்ந்தெடுங்கள்

உங்களுக்கு மைல்கல்லை வைத்துக்கொள்ளுங்கள். நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் புகைக்காமல் இருக்கும் நாட்களுக்கு உங்களுக்கு பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள். உங்களை புகைக்காமல் இருக்கும் நாட்களுக்காக பாராட்டுங்கள். நேர்மறையான நடவடிக்கைகளை தேர்ந்தெடுங்கள்.

உங்களால் முடியாவிட்டால் ஒன்றே ஒன்று மட்டும் புகையுங்கள்

ஒரு சிகரெட், நீங்கள் மீண்டும் புகைக்கும் பழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திவிடும். ஆனால் புகைக்கக் கூடாது என்ற எண்ணத்தை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். ஆனால் உங்களால் இருக்க முடியவில்லையென்றால், ஒரே ஒரு சிகரெட்டை மட்டும் புகையுங்கள். ஆனால் உங்கள் பயணத்தில், தெளிவாக இருங்கள். கட்டாயம் புகையை கைவிட்டு விடுவேன் என்று உறுதியோடு இருங்கள். நீங்கள் விரைவில் புகைப்பழக்கத்தை விட்டுவிட வாழ்த்துக்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்