ஹாஸ்பிட்டல்களுக்கு செல்லவேண்டிய தேவையே இருக்காது! தினமும் காலையில் இந்த பானம் மட்டும் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஹாஸ்பிட்டல்களுக்கு செல்லவேண்டிய தேவையே இருக்காது! தினமும் காலையில் இந்த பானம் மட்டும் போதும்!

ஹாஸ்பிட்டல்களுக்கு செல்லவேண்டிய தேவையே இருக்காது! தினமும் காலையில் இந்த பானம் மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Oct 05, 2024 02:55 PM IST

ஹாஸ்பிட்டல்களுக்கு செல்லவேண்டிய தேவையே இருக்காது. தினமும் காலையில் இந்த பானம் மட்டும் போதும். இதனால் உங்களுக்கு என்ன பலன் என்று பாருங்கள்.

ஹாஸ்பிட்டல்களுக்கு செல்லவேண்டிய தேவையே இருக்காது! தினமும் காலையில் இந்த பானம் மட்டும் போதும்!
ஹாஸ்பிட்டல்களுக்கு செல்லவேண்டிய தேவையே இருக்காது! தினமும் காலையில் இந்த பானம் மட்டும் போதும்!

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1

வெங்காயத்தில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் உடலில் ஃப்ரி ராடிக்கல்கள் ஏற்படாமல் காக்கிறது. இது உங்களுக்கு இளம் வயதிலே வயதான தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது. இது பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது. இதய நோய்களும் வராமல் காக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொழுப்பை குறைக்க உதவுகிறது.

எலுமிச்சை பழம் – 2

பூண்டு – 4 பல்

பூண்டில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் உங்களுக்கு தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது.

செய்முறை

வெங்காயம், பூண்டு, எலுமிச்சை பழம் என அனைத்தையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். எலுமிச்சையை சாறு பிழியக்கூடாது. அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். தோலை நீக்கி பழத்தை மட்டும் சிறு துண்டுளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து 300 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். 10 நிமடங்கள் நன்றாக கொதித்தால்தான் அனைத்து உட்பொருட்களும் தண்ணீரில் நன்றாக கரைந்து அதன் சாறுகள் இறங்கியிருக்கும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உட்பொருள், உங்களுக்கு ஆன்டிபயோடிக்காக செயல்பட்டு, உங்களுக்கு சளி, இருமல் மற்றும் மற்ற பிரச்னைகள் ஏற்படாமல் காக்கும். வைட்டமின் சி உடல் நோய் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இந்த பானம் உங்கள் உடலில் உள்ள கழிவு மற்றும் நச்சுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றிவிடும். இதை நீங்கள் அப்படியே பருகலாம் அல்லது இதனுடன் தேன் கலந்தும் பருகலாம். இது இந்த பானத்தை இனிப்பாக்கும். எண்ணற்ற ஆரோக்கியங்களையும் உடலுக்கு வழங்குகிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் உட்பொருட்கள் உங்களுக்கு இதம் தரும். எனவே தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த பானத்தை பருகுங்கள். இது உங்கள் உடலில் சேரும் அழுக்குகளை அடித்து விரட்டும். இதை சாப்பிட்டால் கொஞ்சம் நாட்களிலே இது உங்களுக்கு இதமான உணர்வைத்தரும் அதை நீங்கள் நன்றாகவே உணர முடியும்.

இதுபோன்ற சமையலறை குறிப்புகள், சமையல் குறிப்புகள், ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் என எண்ணற்ற தகவல்களை உங்களுக்காக ஹெச்.டி தமிழ் அன்றாடம் தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது.

இதனால் உங்களுக்கு நிச்சயம் கட்டாயம் பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம். இவற்றை தொடர்ந்து பெற எங்கள் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். உங்கள் தேவையான தகவல்களைப் பெற்று பலன்பெறுங்கள். ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறோம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.