ஆப்ரேஷன் வேண்டாம்; சிறுநீரகத்தில் 2 எம்எம் முதல் 15 எம்எம் வரை உள்ள கல்லைக்கூட நீக்கலாம் – மருத்துவர் அறிவுரை!
அறுவைசிகிச்சையில்லாமல் சிறுநீரகத்தில் உள்ள கற்களை அடித்து வெளியேற்றும் வழிகளாக சித்த மருத்துவர் கூறுவது என்ன?

சிறுநீரக கற்கள் ஏற்படும் காரணங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். நமது உடலில் உப்பு மற்றும் மினரல்கள் அதிகம் சேர்ந்து விட்டால் அது சிறுநீரகத்தில் கற்களாக படிந்து விடுகிறது. குறிப்பிட்ட வகை உணவுகள், அதிக உடல் எடை, சில மருத்துவ கோளாறுகள் மற்றும் சில மருந்துகள் மற்றும் உணவு சப்ளிமென்ட்கள் ஆகிய அனைத்தும்தான், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட காரணமாகின்றன. சிறுநீர் பாதையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சிறுநீரக கல்லால் பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரகம் முதல் வயிறுவரை இது தொடரும். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றிவிட்டால் சிறுநீர் தண்ணீராக இல்லாமல் திக்காகிவிடும். அவை வெளியேறும்போது கடுமையான வலி ஏற்படும். ஆனால் சிறுநீரகக் கற்கள் நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தாது. அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து, இயற்கை முறையில் வெளியேற்றுவது சிறந்தது.
அறுவைசிகிச்சை செய்யும்போது, அது மீண்டும், மீண்டும் உருவாகத் துவங்கும். சிறுநீரகத்தில் கற்கள் வந்துவிட்டாலே நாம் அதிக தண்ணீர் பருகவேண்டும். அதிகளவு தண்ணீர் பருகிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் அதிக முறை சிறுநீர் கழிப்போம். அதன் வழியாக கல்லும் வெளியேறிவிடும். வலியை குறைக்க வலி நிவாரணி எடுத்துக்கொள்ளப்படும். சிறுநீர் பாதையில் கற்கள் தேங்கிவிட்டால், சிறுநீரக தொற்று ஏற்பட்டு, அறுவைசிகிச்சை வரை கொண்டு செல்லும் வாய்ப்புள்ளது. எனவே சிறிய அளவில் இருக்கும்போதே கவனம் தேவை.
அறிகுறிகள்
சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால் அவற்றை போக்கும் இயற்கை வழிகள்