‘தொங்கும் தொப்பை இனி இல்லை’ உடலின் எடையைக் குறைக்க உதவும் ஸ்ட்ராபெரிகள்; எப்படி என்று பாருங்கள்!
உடல் எடை குறைப்பு பயணத்தில் ஸ்ட்ராபெரிகளின் பங்கு என்ன?
உங்கள் உடலின் எடையை கொஞ்சம் கூடுதலாக குறைக்கவேண்டுமா? அதற்கு ஸ்ட்ராபெரிகள் எப்படி உதவும் என்று பாருங்கள். உடல் எடையைக் குறைக்க உதவுவது ஸ்ட்ராபெரிகள், இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்கள் அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி என்று பாருங்கள். இது சுவையாகவும் இருக்கும். அதே நேரத்தில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும் என்பதால், இது உங்கள் ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவைக் குறைக்கும். இதன் இனிப்புச் சுவை உங்களுக்கு சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற உணர்வைக் கட்டுப்படுத்தும். இது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கிறது. வீக்கம்தான் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணியாகும். எனினும் இதை சாப்பிடும்போது கவனம் தேவை. அதிகமாகும்போது பக்கவிளைவுகளும் ஏற்படும்.
உங்கள் உடல் எடையைக் குறைக்க எப்படி ஸ்ட்ராபெரிகள் உதவுகின்றன?
நீங்கள் உடல் எடையைக் குறைக்க ஸ்ட்ராபெரிகளை சாப்பிட விரும்பினால், இதை உங்கள் உணவில் எப்படியெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் என்று பாருங்கள்.
ஸ்ட்ராபெரிகள்
ஸ்ட்ராபெரிகள் உங்களுக்கு ஆரோக்கியமளிக்கும் ஸ்னாக்ஸ்கள் ஆகும். இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உங்களின் பசியைக் கட்டுப்படுத்தும். உங்களை அதிகம் சாப்பிடவிடாது.
ஸ்ட்ராபெரி ஸ்மூத்திகள்
ஸ்ட்ராபெரிகளை, கொழுப்பு குறைவான யோகர்ட், கீரை, பால் அல்லது தண்ணீர் கலந்து சாப்பிட்டால், ஒரு புத்துணர்வு தரும் ஸ்மூத்தியாகும். இது உங்களுக்கு ஊட்டமளிக்கும். இது நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் சாப்பிட்டக்கூடிய சிறப்பான காலை உணவாகும்.
ஸ்ட்ராபெரி சாலட்
கீரைகள், நறுக்கிய ஸ்ட்ராபெரிகள் மற்றும் நட்ஸ்கள் கலந்து சாப்பிடலாம். இது இனிப்பு, காரம் இரண்டும் கொண்டதாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத்தரும்.
ஸ்ட்ராபெரி ஓட்ஸ்
ஓட்ஸில் ஸ்ட்ராபெரிகளை சேர்த்து சாப்பிடும்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான ப்ரேக் ஃபாஸ்ட் கிடைக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வையும், ஆற்றலையும் கொடுக்கிறது.
ஸ்ட்ராபெரி யோகர்ட்
கிரீக் யோகர்ட்டில் ஸ்ட்ராபெரிகளை கலந்து சாப்பிடலாம். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, திருப்தியைத் தரக்கூடிய ஒரு உணவாகும். கிரீக் யோகர்ட்டில் அதிக புரதச்சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது.
ஸ்ட்ராபெரி தண்ணீர்
தண்ணீர் ஸ்ட்ராபெரிகளை ஊறவைத்து, பருகினால் அது உங்களுக்கு புத்துணர்வு தரும் பானமாகும். இது உங்களுக்கு அதிகம் இனிப்பு உட்கொள்ளப்படுவதைத் தடுக்கும்.
ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்
பால், யோகர்ட், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் சேர்த்து ஐஸ்கிரீம் செய்து சாப்பிடுங்கள். இது உங்களுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு ஐஸ்கிரீம் ஆகும். இது உங்களின் பசியைக் கட்டுப்படுத்தும்.
பக்கவிளைவுகள்
ஸ்ட்ராபெரிகள் மட்டுமல்ல நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும்போது அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல், அமில எதிர்ப்பு போன்றவை ஏற்படுகிறது.
ஸ்ட்ராபெரி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இது எரிச்சல், உப்புசம் மற்றும் சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
ஆர்கானிக் ஸ்ட்ராபெரிகளை பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால், அதுவும் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
ஸ்ட்ராபெரிகளில் ரத்தத்தை நீராக்கும் தன்மை இருக்கும். இது இதயத்துக்கு நல்லது என்றாலும், இது ரத்த வெளியேறும் ஆபத்தை அதிகரிக்கும். எனவே ஆபத்தை உணர்ந்து அளவாக எடுத்து பயன்பெறுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்