அல்சரை காணாமல் போகச் செய்ய மருந்து வேண்டாம்; இந்த உணவுகளே போதும் – மருத்துவர் அறிவுறுத்துவது என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அல்சரை காணாமல் போகச் செய்ய மருந்து வேண்டாம்; இந்த உணவுகளே போதும் – மருத்துவர் அறிவுறுத்துவது என்ன?

அல்சரை காணாமல் போகச் செய்ய மருந்து வேண்டாம்; இந்த உணவுகளே போதும் – மருத்துவர் அறிவுறுத்துவது என்ன?

Priyadarshini R HT Tamil
Dec 30, 2024 03:55 PM IST

அல்சரை போக்கும் உணவுப்பழக்கங்களாக மருத்துவர் கூறுவது என்ன?

அல்சரை காணாமல் போகச் செய்ய மருந்து வேண்டாம்; இந்த உணவுகளே போதும் – மருத்துவர் அறிவுறுத்துவது என்ன?
அல்சரை காணாமல் போகச் செய்ய மருந்து வேண்டாம்; இந்த உணவுகளே போதும் – மருத்துவர் அறிவுறுத்துவது என்ன?

அல்சரின் அறிகுறிகள்

வயிறு எரிச்சல்

வயிறு வலி

வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு

கொழுப்பு உணவுகளை ஏற்காமை

நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.

தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்

வாந்தி

ரத்த வாந்தி,

கருப்பாக மலம் கழித்தல்,

மூச்சுத்திணறல்

மயக்கம்

சோர்வு

வாந்தி

உடல் எடையிழப்பு

பசியின்மை

பசியில் மாற்றம்

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.

அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.

ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். இந்த அல்சரை குணப்படுத்த மருந்துகள் வேண்டாம். உணவுகளே போதும் என்று மருத்துவர் கூறுகிறார்.

திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது வலைதளப்பக்கத்தில் அல்சரைப் போக்க நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அது என்னவென்று பார்ப்போம்.

அல்சர் அச்சம்

டாக்டரிடம் செல்லும்போது பெரும்பாலானோர் எனக்கு அல்சர் உள்ளது. எனவே மருந்தை பார்த்து எழுதுங்கள் என்று கேட்டுக்கொள்வார்கள். அல்சர் குறித்து பயப்பட வேண்டாம். அல்சர் என்பது ஒரு அறிகுறி. அது வியாதி கிடையாது. இது சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, காலந்தவறி சாப்பிடுவது, காரம் சாப்பிடுவது, சூடாக சாப்பிடுவது, இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, மனஉளைச்சல், மனஅழுத்தம், மனக்கவலை, மருத்துவரின் அறிவுரையின்றி தேவையற்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது, விரதம் இருப்பது, மலச்சிக்கல் இருப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுவதுதான் அல்சர். இது அனைத்தும் சேர்ந்து கேஸ்ட்ரிக் அல்சரை உருவாக்கும். உங்கள் குடலில் புண்ணை உண்டாக்கும். இதை நாம் மருந்தின்றி குணப்படுத்த முடியும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்.

என்ன சாப்பிடவேண்டும்?

உணவு மூலம் குணப்படுத்த முடியும். அதிக காரம், அதிக புளிப்பு, அதிக உப்பு இல்லாத உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். அதிக சூடான உணவை சாப்பிடக்கூடாது. உணவுடன் வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மனத்தாளி கீரை என கீரைகளை வாரத்தில் மூன்று முறை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். தயிர், மோர் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்துக்கொள்ளவேண்டும். உணவில் நெய் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சிறப்பாக என்ன செய்யலாம்?

வெந்தயத்தை முளைக்க வைத்து காலை மற்றும் மாலை இருவேளையும் 10 கிராம் எடுத்துக்கொள்ளவேண்டும். 25 கிராம் சீரகத்தை 10 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்துக்கொள்ளவேண்டும். அந்த தண்ணீரை மட்டுமே நாள் முழுவதும் பருகவேண்டும். மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் போதும். உங்கள் அல்சர் காணாமல் போகும்.

இவற்றையெல்லாம் செய்து வந்தாலே அல்சர் காணாமல் போகும் என்று மருத்துவர் காமராஜ் அறிவுறுத்துகிறார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.