நிப்பட்டு : கர்நாடகா ஸ்பெஷல் நிப்பட்டு; என்னடா பேர் இப்படி இருக்குன்னு தோணுதா? சூப்பரான மொறுமொறு ஸ்னாக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  நிப்பட்டு : கர்நாடகா ஸ்பெஷல் நிப்பட்டு; என்னடா பேர் இப்படி இருக்குன்னு தோணுதா? சூப்பரான மொறுமொறு ஸ்னாக்ஸ்!

நிப்பட்டு : கர்நாடகா ஸ்பெஷல் நிப்பட்டு; என்னடா பேர் இப்படி இருக்குன்னு தோணுதா? சூப்பரான மொறுமொறு ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Updated May 24, 2025 02:33 PM IST

நிப்பட்டு : இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் அடிக்கடி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். இதை நீங்கள் ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

நிப்பாட்டு : கர்நாடகா ஸ்பெஷல் நிப்பாட்டு; என்னடா பேர் இப்படி இருக்குன்னு தோணுதா? சூப்பரான மொறுமொறு ஸ்னாக்ஸ்!
நிப்பாட்டு : கர்நாடகா ஸ்பெஷல் நிப்பாட்டு; என்னடா பேர் இப்படி இருக்குன்னு தோணுதா? சூப்பரான மொறுமொறு ஸ்னாக்ஸ்!

தேவையான பொருட்கள்

• அரிசி மாவு – 2 கப்

• மைதா மாவு – அரை கப்

• ரவா – கால் கப்

• வறுத்த வேர்க்கடலை – அரை கப்

• பொட்டுக்கடலை – அரை கப்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• எண்ணெய் – தேவையான அளவு

• உப்பு – தேவையான அளவு

• மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• எள் – ஒரு ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

1. ஒரு பாத்திரததில் அரிசி மாவு, மைதா மாவு மற்றும் ரவை என்ற அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். கடலை மற்றும் பொட்டுக்கடலை இரண்டையும் காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக்கிகொள்ள வேண்டும். அதையும் இந்த மாவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

2. அடுத்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மிளகாய்த் தூள், சீரகம், பெருங்காயப் பொடி, எள் மற்றும் உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

3. கொஞ்சம் கொஞ்மாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும். பிசைந்தவற்றை மூடி வைத்துவிடவேண்டும். மாவு சிறிது நேரம் செட்டாக வேண்டும்.

4. ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து நன்றாக சூடாக்கவேண்டும்.

5. ஒரு பிளாஸ்டிக் ஷீட் எடுத்து ஒரு உருண்டை மாவை அதில் வைத்துக்கொள்ளவேண்டும். மேல்புறத்தை மற்றொரு பிளாஸ்டிக் ஷீட்டால் மூடவேண்டும். மூடியதை சப்பாத்தி கட்டை வைத்து தேய்த்துக்கொள்ளவேண்டும். மாவு ஃப்ளாட்டாகியிருக்கும்.

6. இதில் ஒரு வட்டமான பாட்டில் மூடியை வைத்து சிறு சிறு வட்டங்களாக வெட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.

7. இதை சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால் சூப்பர் சுவையான நிப்பட்டு தயார்.

இது சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதை மாலை நேரத்தில் டீயுடன் இதை பரிமாறினால் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு இதை செய்துகொடுத்தால் அவர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள். இதை எப்படி செய்வது என்று கேட்பார்கள். இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் அடிக்கடி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். இதை நீங்கள் ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.