WALKING TIPS: சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கனுமா?..வெறும் 11 நிமிடங்கள் போதுமாம்..ஆய்வு அறிக்கை சொல்வது இதுதான்..!
WALKING TIPS: தினமும் நடைப்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உண்டு. ஆனால் நடப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் உங்கள் ஆயுள் அதிகரிக்கும் என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
WALKING TIPS: நடைபயிற்சி உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மற்றும் எந்த நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டது. ஒரு நாளைக்கு 11 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்க வேண்டும் என்று சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு பதினொரு நிமிட நடைப்பயிற்சி உங்களை அகால மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்றும் உங்கள் ஆயுளை அதிகரிக்கவும் செய்யும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 நிமிட நடைப்பயிற்சி பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..!
உடற்பயிற்சியின்மை மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறையால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், அதிக எடை மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தினமும் 11 நிமிடம் நடக்கும்போது மூளையின் சக்தி அதிகரிக்கும். மூளை ஆக்கப்பூர்வமாக சிந்திக்கிறது. மேலும் தினமும் 11 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தினமும் குறைந்தது 11 நிமிடங்களாவது நடப்பது நாள்பட்ட நோய்களால் ஏற்படும் அகால மரண அபாயத்தை பாதியாகக் குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மூன்று கோடிக்கும் அதிகமான மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அவர்களின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதுடன், அவர்களின் ஆயுட்காலமும் கூடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எடை இழப்பு
11 நிமிடங்கள் நடப்பது எடை இழப்பு முறையாக இருக்காது, ஆனால் அது கூடுதல் கலோரிகளை எரிக்க உதவும். இந்த 11 நிமிட விறுவிறுப்பான நடைப்பயிற்சி நிச்சயமாக உடல் எடையை குறைக்க உதவும். நடைப்பயிற்சி உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைத் தட்டியெழுப்ப முடியும். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னிலை வகிக்கிறது. நினைவாற்றல், திறந்த சிந்தனையை ஊக்குவிக்கிறது.
இதய ஆரோக்கியம்
தினமும் 11 நிமிடங்கள் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நடைப்பயிற்சி இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் வழங்கல் அதிகரிக்கிறது. இது இதய பிரச்சனைகளை தடுக்கிறது.
மன அழுத்தம் குறையும்
நடைப்பயிற்சி மன அழுத்தத்தை சமாளிக்கும் வலிமையையும் தருகிறது. இது நரம்பு மண்டலத்தை அமைதியாக வைத்திருக்கும். மனநிலையை அதிகரிக்கும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. தினசரி மன அழுத்தத்தை குறைக்கிறது.
மூட்டு வலி குறையும்
தினமும் நடப்பவர்களுக்கு மூட்டு வலி குறையும். மூட்டுகளில் அழுத்தம் இல்லை. மூட்டுவலி போன்றவற்றைத் திறம்படச் சமாளிக்கும் வலிமையைத் தருகிறது. இது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
நீரிழிவு நோய்
தற்போது அனைவருக்கும் டைப் 2 சர்க்கரை நோய் வரும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோயைத் தவிர்க்க தினமும் 11 நிமிடம் சுறுசுறுப்பாக நடக்க வேண்டும் . பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, மணிக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிலோமீட்டர் வேகத்தில் நடப்பது நீரிழிவு நோயின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது. எனவே சர்க்கரை நோயை தவிர்க்க இன்றே நடைப்பயிற்சியை தொடங்குங்கள்.
தூக்கமின்மை பிரச்னை
நடைபயிற்சி தூக்கமின்மை பிரச்சனைகளையும் குறைக்கிறது. நடைபயிற்சி மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மூளை செல்களை மீண்டும் உருவாக்குகிறது, இது செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்