Realme 9i 5G: விற்பனைக்கு வந்துவிட்டது புதிய ரியல்மி!
ரியல்மி நிறுவனம் Realme 9i 5G என்ற புதிய ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டுள்ளது.

<p>ரியல்மி 9i 5G</p>
ஸ்மார்ட்போன்களின் தேவையும், வருகையும், எண்ணிக்கையும் தற்போது இந்திய சந்தையில் அதிகரித்துவிட்டன. அந்த வகையில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் ரியல்மி புதிய ரியல்மி 9i 5G என்ற ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இதன் அம்சங்களும் அமைப்பும் மேம்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் 14,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. மேலும் இது ராக்கிங் பிளாக், மெட்டாலிக் கோல்டு என்று இரண்டு கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் போன் இன்று மதியம் 12 மணி அளவில் realme.com மற்றும் flipkart தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் மூலம் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.