தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  New Bikes To Be Launched In July Month

ஜூலை மாதம் அறிமுகமாகும் பைக்குகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 03, 2022 04:14 PM IST

இந்த மாதம் அறிமுகமாக இருக்கும் பைக்குகள் குறித்து இங்குக் காண்போம்.

புதிய பைக்குகள்
புதிய பைக்குகள்

ட்ரெண்டிங் செய்திகள்

ஹார்லே டேவிட்சன் Nightster

ஹார்லே டேவிட்சன் நிறுவனம் Nightster என்ற பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் 14 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

ஹீரோ Xpulse 200 4V Rally Edition

ஹீரோ நிறுவனம் புதிய Xpulse 200 4V பைக்கின் புதிய Rally Edition பைக்கை வெளியிடவுள்ளது. இது புதிய டிசைன், வசதிகள் கொண்டு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

டிவிஎஸ் Zeppelin

டிவிஎஸ் நிறுவனம் புதிய zeppelin பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது. இது கிருஸர் பைக் வடிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் வரும் ஜூலை மாதம் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. 223சிசி என்ஜின் கொண்ட இந்த பைக் அப்பாச்சி RTR 200 பைக்கின் என்ஜின் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது அப்பாச்சி RR 310 பைக்கின் என்ஜின் கொண்டு அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

டுகாட்டி Streetfighter V4 SP

டுகாட்டி நிறுவனம் Streetfighter V4 SP பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பைக் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும். இந்த பைக் 28 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்ட் Hunter 350

ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் Hunter 350 என்ற பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இது ஸ்க்ராம்ப்ளேர் ரக பைக்காக அறிமுகமாக உள்ளது. இது வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள அதே என்ஜின் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுசூகி Katana

சுசூகி நிறுவனத்தின் புதிய Katana பைக் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகமானாலும் தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆக உள்ளது. இந்த பைக் 14 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகும்

WhatsApp channel