Nervous System : நரம்புத்தளர்ச்சியால் ஆடும் தலை; நடுங்கும் கைகள் என அவதியா? இந்த காயை இப்படி செய்தால் பலன்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nervous System : நரம்புத்தளர்ச்சியால் ஆடும் தலை; நடுங்கும் கைகள் என அவதியா? இந்த காயை இப்படி செய்தால் பலன்!

Nervous System : நரம்புத்தளர்ச்சியால் ஆடும் தலை; நடுங்கும் கைகள் என அவதியா? இந்த காயை இப்படி செய்தால் பலன்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 15, 2024 12:58 PM IST

Nervous System : நரம்புத்தளர்ச்சியால் ஆடும் தலை, நடுங்கும் கைகள் என அவதிப்படுகிறீர்களா? அதற்கு கோவக்காய் உங்களுக்கு உதவும்.

Nervous System : நரம்புத்தளர்ச்சியால் ஆடும் தலை; நடுங்கும் கைகள் என அவதியா? இந்த காயை இப்படி செய்தால் பலன்!
Nervous System : நரம்புத்தளர்ச்சியால் ஆடும் தலை; நடுங்கும் கைகள் என அவதியா? இந்த காயை இப்படி செய்தால் பலன்!

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

ஒரு சிலருக்கு 50 அல்லது 60 வயதைக்கடந்தாலே போதும், அவர்களுக்கு கை-கால்களில் நடுக்கம், தலையில் சிறிய ஆட்டம் எல்லாம் இருக்கும். இது நரம்புத்தளர்ச்சியால் ஏற்படும் பிரச்னையாகும்.

பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதுபோல் உடல் உறுப்புகளில் நடுக்கம் ஏற்படும். ஆனால் சாதாரண நரம்புத்தளர்வு நோய் என்றால் அதற்கு இயற்கையிலேயே தீர்வு பெறமுடியும். அதற்கு இந்த ஒரே ஒரு காய் மட்டும் போதும்.

தேவையான பொருட்கள்

கோவக்காய் – 5

தண்ணீர்

செய்முறை

கோவக்காயை 500 எம்எல் தண்ணீரில் போட்டு, அந்த தண்ணீர் 100 மில்லி லிட்டராக சுண்டி வரவேண்டும். அப்போதுதான் கோவக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் நன்றாக இறங்கும். இதை வடிகட்டி, காலை உணவு எடுத்துக்கொள்வதற்கு அரை மணி நேரம் முன்னரும், இரவு உணவுக்கு முன்னரும் இதை சாப்பிடவேண்டும்.

கோவக்காயை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. அப்போது பருகும் தண்ணீரை அப்போதே தயாரித்து ஃபிரஷ்ஷாக பருகவேண்டும். அப்போதுதான் உங்களுக்கு முழு பலன்கள் கிடைக்கும். இது உடலில் நரம்புத்தளர்ச்சியால் ஏற்படும் பொதுவான நடுக்கத்தைக் குறைக்கும்.

கோவக்காயின் நன்மைகள்

கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம்.

இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது

சோர்வை நீக்க உதவுகிறது

நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது

உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது

செரிமானத்தை அதிகரிக்கிறது

சிறுநீரக கற்கள் போக உதவும் கோவக்காய்

நோய்களை குணப்படுத்துகிறது

அலர்ஜியை எதிர்த்து போராட உதவுகிறது

கோவக்காய் தொற்றுக்களை குணப்படுத்துகிறது

புற்றுநோயை தடுக்கிறது

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது

இத்தனை நன்மைகள் நிறைந்த கோவக்காயை நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதை வெறும் மருந்தாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல் உணவாகவும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் இதை சேர்த்துக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.