தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nellur Kara Chutney : சுடச்சுட ஊத்தப்பமும், நெல்லூர் காரச்சட்னியும், இப்படி செய்தால் உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!

Nellur Kara Chutney : சுடச்சுட ஊத்தப்பமும், நெல்லூர் காரச்சட்னியும், இப்படி செய்தால் உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!

Priyadarshini R HT Tamil
Jul 06, 2024 11:49 AM IST

Nellur Kara Chutney : சுடச்சுட ஊத்தப்பமும், நெல்லூர் காரச்சட்னியும், இப்படி செய்தால் உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள். எப்படி செய்யவேண்டும் தெரியுமா?

Nellur Kara Chutney : சுடச்சுட ஊத்தப்பமும், நெல்லூர் காரச்சட்னியும், இப்படி செய்தால் உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!
Nellur Kara Chutney : சுடச்சுட ஊத்தப்பமும், நெல்லூர் காரச்சட்னியும், இப்படி செய்தால் உச்சுக்கொட்டி சாப்பிடுவீர்கள்!

நெல்லூர் காரச்சட்னி செய்ய தேவையான பொருட்கள்

வர மிளகாய் – 10 (ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

பூண்டு – 15 பல்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

ட்ரெண்டிங் செய்திகள்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை – அரை ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

வரமிளகாயை சூடான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதை மிக்ஸிஜாரில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் பூண்டு பற்கள், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, உப்பு, சர்க்கரை என அனைத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவேண்டும். சுவையான நெல்லூர் காரச்சட்னி தயார்.

இதை ஊத்தப்பத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். இட்லி, தோசைக்கும் சுவை அள்ளும்.

ஒருமுறை ருசித்துவிட்டால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வழக்கமாக அல்லாமல் இந்த சட்னிக்கு மிளகாயை ஊறவைத்து சேர்க்கவேண்டும். காரம் குறைவாக விரும்புபவர்கள் மிளகாய் அளவை குறைத்துக்கொள்ளலாம். ஆனால் இந்த சட்னி காரம் அதிகம் விரும்பி உண்பவர்களுக்குத்தான் சிறந்த தேர்வு.

குறிப்புகள்

தக்காளி நல்ல பழுத்த தக்காளியாக இருக்கவேண்டும்.

இதை நாட்டுத்தக்காளியில்தான் கட்டாயம் செய்யவேண்டும். பெங்களூர் தக்காளியில் முயற்சித்துவிடாதீர்கள். சுவை நன்றாக இருக்காது.

இதை இட்லி, தோசை, சாப்பாத்திக்கு தொட்டுள்கொள்ளலாம். வெரைட்டி சாதங்களுக்கு தொட்டுக்கொள்ளலாம். சூப்பர் சுவையில் அசத்தும்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் தொக்கு செய்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

தக்காளி நாம் அன்றாட உணவில் சேர்ப்பதுதான் என்றாலும், அதன் நன்மை கருதி, அதை தினமுமே உணவில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.