Tirunelveli Rice Upma : திருநெல்வேலி அரிசி உப்புமா! இப்டி செய்ங்க திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
Nellai Rice Upma : திருநெல்வேலி அரிசி உப்புமா! இப்டி செய்ங்க திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
தேவையான பொருட்கள்
உப்புமா மாவு செய்ய
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – கால் கப்
கடலை பருப்பு – கால் கப்
(இரண்டு பருப்பும் சேர்த்து 1/2 கப் அல்லது துவரம் பருப்பு மட்டும் 1/2 கப் சேர்த்துக் கொள்ளலாம்)
உப்புமா செய்ய
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
அல்லது
சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
இஞ்சி - சின்ன துண்டு (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
துருவிய தேங்காய் – அரை கப்
கடுகு – கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் அரிசி மற்றும் துவரம் பருப்பை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாவு ரவை பதத்துக்கு இருக்க வேண்டும். இதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து ஒரு மாதம் வரை வைத்து கொள்ளலாம்.
பொடித்த ரவையில் ஒரு கப் பொடித்து வைத்துள்ள அரிசி ரவையை அளந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
கடாயில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து பின் மிளகாய் வற்றல், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பச்சை மிளகாய் வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிபடாமல் கிளறவேண்டும்.
5 நிமிடம் முதல் 7 நிமிடங்கள் வரை வெந்ததும் நல்ல வேகமாக கிளறிவிடவேண்டும். சிறிது தேங்காய் எண்ணெயை ஓரங்களில் விட்டு கிளறவேண்டும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவேண்டும். சூடாக பரிமாறலாம்.
இதற்கு தேங்காய் அல்லது தக்காளி சட்னி சேர்த்து பரிமாறலாம். சாம்பார் அல்லது குருமாவும் இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
குறிப்பு
அரிசி பருப்பை பொடிக்கும்போது இடைவெளி விட்டு விட்டு ரவை பதத்துக்கு பொடித்துக் கொள்ளவேண்டும்.
இரும்பு கடாய் அல்லது வெண்கல உருளியில் செய்யும்போது சுவையாக இருக்கும். நீங்கள் எடுக்கும் அரிசி ரவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சாதாரண ரவை உப்புமா பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் நீங்கள் இப்படி செய்யும்போது, எனவே செய்து ருசித்து பாருங்கள்.
நன்றி - விருந்தோம்பல்
டாபிக்ஸ்