வேப்பம்பூ ரசம் : கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம் பூக்களில் சுவையான ரசம் தயாரிப்பது எப்படி பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வேப்பம்பூ ரசம் : கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம் பூக்களில் சுவையான ரசம் தயாரிப்பது எப்படி பாருங்கள்!

வேப்பம்பூ ரசம் : கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம் பூக்களில் சுவையான ரசம் தயாரிப்பது எப்படி பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Apr 15, 2025 11:40 AM IST

வேப்பம்பூ ரசம் : தற்போது வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதில் ரசம் வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதில் ரசம் வைப்பது எப்படி என்று பாருங்கள்.

வேப்பம்பூ ரசம் : கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம் பூக்களில் சுவையான ரசம் தயாரிப்பது எப்படி பாருங்கள்!
வேப்பம்பூ ரசம் : கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம் பூக்களில் சுவையான ரசம் தயாரிப்பது எப்படி பாருங்கள்!

நோயாளிகள் எப்படி பயன்படுத்தலாம்?

சர்க்கரை நோயாளிகள் இந்தப்பொடியை இரண்டு முதல் 4 கிராம் அளவு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். உணவுக்கு முன்னர் சாப்பிடுவது நல்லது.

மூட்டு வலி உள்ளவர்களும் இதை சூடான தண்ணீரில் கலந்து ஆகாரத்துக்கு பின்னர் பருகுவது நல்லது.

சரும நோயாளிகள் சூடான தண்ணீர் அல்லது தேனுடன் கலந்து ஆகாரத்துக்கு முன்னர் சாப்பிடவேண்டும்.

இதை அளவோடு எடுத்துக்கொண்டால் அந்தந்த நோய்களுக்கு நிவாரண கொடுக்கும். இந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வேப்பம் பூ கசக்காது. இனிக்கும். இவ்வாறு வேப்பம் பூக்களின் நன்மைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதில் ரசம் வைப்பது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

• புளி – எலுமிச்சை அளவு

• உப்பு – ஒரு ஸ்பூன்

• வர மிளகாய் – 4

தாளிக்க தேவையான பொருட்கள்

• நெய் – ஒரு ஸ்பூன்

• வேப்பம்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்

• துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்

செய்முறை

1. புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்.

2. கடாயில் நெய்யை சேர்த்து சூடான வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து கரைத்த புளி தண்ணீரை சேர்க்கவேண்டும். இதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவேண்டும்.

3. ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவேண்டும. அது பொரிந்தவுடன், கறிவேப்பிலை மற்றும் துவரம் பருப்பு சேர்த்து வறுக்கவேண்டும். இதை தனியாக வைத்துவிடவேண்டும்.

4. அதே கடாயில் வேப்பம் பூக்களை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். அது பொன்னிறமானவுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். புளித்தண்ணீரை சேர்த்து, நுரை கூட்டி வந்தவுடன், தாளிப்பையும் சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான வேப்பம் பூ ரசம் தயார்.

இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். வேப்பம் பூ ரசத்தை செய்து வைத்து சிறிது நேரம் கழித்துதான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் மருத்துவ குணங்கள் ரசத்தில் இறங்கியிருக்கும்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.