Nawabi Tea : ராஜாக்கள் பருகிய நவாபி சாய்; வட இந்தியாவில் பிரபலம்; வாசனையான, ஸ்ட்ராங்கான தேநீர்!
Nawabi Tea : ராஜாக்கள் பருகிய நவாபி சாய் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
ஏலக்காய் – 3
பட்டை – சிறிய துண்டு
மிளகு – 4
சோம்பு – கால் ஸ்பூன்
காய்ந்த ரோஜா இதழ் – ஒரு ஸ்பூன்
சர்க்கரை – ஒரு ஸ்பூன்
நாட்டு ரோஜா பூ – 1
பால் – 2 டம்ளர்
இஞ்சி – ஒரு துண்டு
டீத்தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ஏலக்காய், பட்டை, மிளகு, சோம்பு, காய்ந்த ரோஜா இதழ், சர்க்கரை சேர்த்து நன்றாகப் பொடித்துக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதில் சில ரோஜா இதழ்களை 10 முதல் 15 சேர்த்து கொதிக்க விடவேண்டும். அடுத்து டீத்தூள் மற்றும் அரைத்த மசாலா சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அடுத்து தட்டிய இஞ்சித்துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். மேலும் சில ரோஜா இதழ்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
டீ நன்றாக கொதித்து வரும்போது வடிகட்டினால் சூடான மற்றும் சுவையான நவாபி டீ தயார். இதை நீங்கள் தலைவலி இருக்கும்போது செய்து பருகினால் மிகவும் இதமாக இருக்கும். உறவினர்கள் வரும்போது அல்லது விழாக்களில் பரிமாற ஏற்றது இந்த தேநீர்.
மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள்
வெஜிடபுள் ஓட்ஸ் இட்லி செய்வது எப்படி என்று பாருங்கள்
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - ஒரு கப்
கோதுமை ரவை - ஒரு கப்
கேரட், பீன்ஸ், பட்டாணி, கோஸ் - ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – ஒரு இன்ச்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லித்தழை – சிறிது
தயிர் – ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ரவை, ஓட்ஸ், தயிர் மூன்றையும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் நறுக்கிய காய்களைச் சேர்த்து வதக்கி எடுத்து, மாவுக் கலவையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். சுவையான வெஜிடபுள் ஓட்ஸ் இட்லி தயார். தேங்காய், தக்காளி, கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து பரிமாற சூப்பர் சுவையாக இருக்கும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்