Nava Dhaniya Sundal : தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் போதும்! உடல் வலுப்பெறுவது உறுதி!-nava dhaniya sundal a handful of this daily is enough the body is sure to get stronger - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nava Dhaniya Sundal : தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் போதும்! உடல் வலுப்பெறுவது உறுதி!

Nava Dhaniya Sundal : தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் போதும்! உடல் வலுப்பெறுவது உறுதி!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2024 05:00 PM IST

Nava Dhaniya Sundal : தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் போதும்! உடல் வலுப்பெறுவது உறுதி!

Nava Dhaniya Sundal : தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் போதும்! உடல் வலுப்பெறுவது உறுதி!
Nava Dhaniya Sundal : தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் போதும்! உடல் வலுப்பெறுவது உறுதி!

கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்

கொண்டை கடலை – 2 டேபிள் ஸ்பூன்

தட்டை பயிர் – 2 டேபிள் ஸ்பூன்

கருப்பு கொண்டை கடலை – 2 டேபிள் ஸ்பூன்

கடலை – 2 டேபிள் ஸ்பூன்

கொள்ளு – 2 டேபிள் ஸ்பூன்

பாசிப்பயிறு – 2 டேபிள் ஸ்பூன்

உங்களுக்கு தேவைப்பட்டால் மற்ற அனைத்து வகை பீன்ஸ்களையும் பயன்படுத்தலாம்.

செய்முறை

இந்த அனைத்து பருப்பு, பீன்ஸ் வகைகளை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். குறைந்தது 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

இதை நேரடியான மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கலாம் அல்லது குக்கரில் வைத்து 4 விசில் வரை விட்டு அல்லது நீங்கள் வழக்கமாக வேகவைக்கும் அளவு வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.

குக்கர் ரிலீஸ்ஆனவுடன், நீங்கள் தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ளலாம். அந்த தண்ணீரை சப்பாத்தி மாவு பிசைவதற்கு அல்லது வேறு சமையல் செய்வதற்கு உபயோகித்துக்கொள்ளலாம்.

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – 1 ஸ்பூன்

உளுந்து – 1 ஸ்பூன்

வர மிளகாய் – 2

கறிவேப்பிலை – 2 கொத்து

பெருங்காய்த்தூள் – கால் ஸ்பூன்

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் கிள்ளி சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதில் வேகவைத்த நவதானியங்கள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால். சுவையான நவதானிய சுண்டல் தயார்.

இதனுடன் தேங்காய் துருவல், சீரகம், இஞ்சி-பச்சைமிளகாய் துருவல் சேர்த்து பிரட்டினால் வித்யாசமான சுவை கிடைக்கும்.

வரமிளகாய் தூள் சேர்த்து, தேங்காய் துருவல் சேர்த்தும் பரிமாறலாம்.

இந்த சுண்டலை பண்டிகை காலங்களில் பரிமாறலாம். இது குழந்தைகளுக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்.

இதை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும், சாதத்துடனும் பரிமாறலாம்.

டயட்டில் இருக்கும் மக்களுக்கு இது ஒரு சிறந்த உணவு. இதில் பச்சைக்காய்கறிகளை தூவியும் சாப்பிடலாம்.

வெள்ளரி, மாங்காய், கேரட், வெங்காயம் ஆகியவற்றை குட்டியாக வெட்டி சேர்த்து சாப்பிடலாம். இதை சாப்பிட்டுவிட்டு, ஒரு கப் பால் அல்லது லஸி குடித்தால் வயிறு நன்றாக நிறைந்த உணர்வை தரும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.