Natural vs Artifical Sugar: சர்க்கரை ஆற்றலை தருகிறதா அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதா? தெரிந்து கொள்ளுங்கள்
இயற்கையான சர்க்கரைக்கும், இனிப்பு சுவைக்காக சேர்மானங்கள் சேர்க்கும் சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசங்களும், ஊட்டமில்லாத சர்க்கரையை அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிரக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி உடல் ஆரோக்கிய நிபுணர்கள் தரும் யோசனைகளை தெரிந்துகொள்வோம்.
இயற்கையாக கிடைக்கும் சர்க்கரையால் எந்த பாதிப்பும் கிடையாது. ஏனென்றால் இவை நமது அன்றாட உணவு பழக்கத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அதேபோல் சேர்மானங்கள் நிறைந்த சர்க்கரையை எந்த அளவு சாப்பிடாமல் இருக்கிறோமோ அந்த அளவு ஆரோக்கியத்தை பேனி காக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சர்க்கரைக்கும், சேர்மானங்கள் நிறைந்த சர்க்கரைக்கும் இடையிலான வித்தியாசம்
சர்க்கரை என்பது கார்ப்போஹைட்ரேட் என்ற இன்னொரு பெயர் உள்ளது. கார்ப்போஹைட்ரேட் நிறைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்களில் அவை நிறைந்துள்ளது. நமது ஆற்றலின் ஆதாரமாக கார்ப்போஹைட்ரேட் இருப்பதால், சர்க்கரை உடலின் எரிபொருள் போன்று செயல்படுகிறது. இவை உடலுக்கு அத்தியாவசியமானது மட்டுமல்லாமல் எந்த பிரச்னையும் ஏற்படுத்தாது.
சேர்மானம் உள்ள சர்க்கரை என்பது நாம் உணவு தயாரிக்கும்போதோ அல்லது சமையல் அறையில் உணவை சமைக்கும்போது சேர்க்கப்படுவதாகும். இவை பிரித்தெடுக்கப்பட்டு, சுத்திரகரிக்கப்பட்டு உணவில் சேர்க்கப்படுகிறது. இந்த சர்க்கரையானது உணவின் ருசியை கூட்டவும், மேம்படுத்தவும் உதவுகிறது. சேர்மானங்கள் உள்ள சர்க்கரை பல பெயர்கள் உள்ளன. அவற்றுக்கு டேபிள் சுகர், குளுக்கோஸ், கேன் சுகர், கார்ன் சிரப், நெக்டர் உள்பட பல வகைகளில் உள்ளன. இந்த சேர்மானங்கள் நிறைந்த சர்க்கரைதான் உடலுக்கு வில்லனாக செயல்படுகிறது.
சர்க்கரை ஆற்றலை தருகிறதா அல்லது நோய் எதிர்ப்பு திறனை குறைக்கிறதா?
சர்க்கரை குடலுக்கு எரிச்சலுட்டக்கூடியவையாக உள்ளது. ஒவ்வொரு முறை சேர்மானங்கள் நிறைந்த சர்க்கரையுடன் கூடிய உணவுகள் அல்லது பானங்கள் எடுத்துக்கொள்ளும்போது, குடலில் உள்ள நுண்ணுயிர்களை தாக்குகிறது. இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, உடலை சோர்வடைய செய்கிறது. இதனால் தொற்று மற்றும் வியாதிகளுக்கு எதிராக சண்டையிடும் தன்மையை இழக்கிறது.
பழங்கள், தானியங்கள், சாப்பாடு போன்றவற்றிலிருந்து இயற்கையாக கிடைக்கும் சர்க்கரை எந்த விதமான பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. அவை நமக்கு ஆற்றலை தர உதவுகிறது. அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றின் கலவை உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது. ஆனால் சேர்மானங்கள் நிறைந்த சர்க்கரையில் கலோரிகள் ஏதும் இருக்காது. இதன்மூலம் ஊட்டச்சத்துகள் ஏதும் இல்லாத கலோரிகளை சாப்பிடுகிறோம் என்பது மட்டுமில்லாமல், உடலிலுள்ள ஊட்டச்சத்துகளும் கழிவதோடு, குடல் பாதிக்கப்படுகிறது.