தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nattukozhi Ketti Kulambu : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் – நாட்டுக்கோழி கெட்டிக் குழம்பு மற்றும் மசாலா! 2 ரெசிபி

NattuKozhi Ketti Kulambu : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் – நாட்டுக்கோழி கெட்டிக் குழம்பு மற்றும் மசாலா! 2 ரெசிபி

Priyadarshini R HT Tamil
Jun 24, 2024 06:00 AM IST

NattuKozhi Ketti Kulambu : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நாட்டுக்கோழி கெட்டிக் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். மசாலா மற்றும் குழம்பு என இரண்டு ரெசிபிக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

NattuKozhi Ketti Kulambu : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் – நாட்டுக்கோழி கெட்டிக் குழம்பு மற்றும் மசாலா! 2 ரெசிபி
NattuKozhi Ketti Kulambu : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் – நாட்டுக்கோழி கெட்டிக் குழம்பு மற்றும் மசாலா! 2 ரெசிபி

நாட்டுக்கோழி கெட்டிக்குழம்பு ஸ்பெஷல் மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

மிளகு – ஒரு ஸ்பூன்

ட்ரெண்டிங் செய்திகள்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு

பூண்டு – ஒரு கைப்பிடியளவு

வர மிளகாய் – 10

இஞ்சி – ஒரு இன்ச்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

சோம்பு – 1 ஸ்பூன்

தேங்காய் – ஒரு கப்

மசாலா அரைப்பது எப்படி?

கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து பொன்னிறமானவுடன் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதில் பட்டை, மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு, வர மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சோம்பு, தேங்காய் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் அதை ஆறவைத்து, ஆறியவுடன் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

நாட்டுக்கோழி கெட்டிக்குழம்பு மசாலா இப்போது தயாராக உள்ளது.

கெட்டிக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - அரை கிலோ

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

கோழியை நன்றாக சுத்தம் செய்து அலசி, குக்கரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும். போதிய விசில்கள் விட்டு வெந்தவுடன் அதை எடுத்து வைத்துக்கொள்வேண்டும்.

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வரமிளகாய் – 5

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவேண்டும். பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். 

பின்னர் அரைத்த கெட்டிக்குழம்பு மசாலாவைசேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

பின்னர் அதில் வேகவைத்த நாட்டுக்கோழியை சேர்க்கவேண்டும். பின்னர் மசாலாவும், கோழியும் சேர்ந்து வேகவிடவேண்டும். பின்னர் மல்லித்தழை தூவி இறக்கவேண்டும்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நாட்டுக்கோழி கெட்டிக்குழம்பு தயார்.

இதை சாதம், சப்பாத்தி, பூரி, பரோட்டா, இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இந்த கெட்டிக்குழம்பை சாப்பிடுவார்கள். வைத்தவுடனே காலியாகிவிடும் சுவை நிறைந்ததாக இருக்கும்.

இதன் மசாலாவில் முந்திரி பருப்பு சேர்த்திருப்பதால், அது சுவையுடன், மசாலாவுக்கு நல்ல கிரீம் பதத்தையும் தரும்.

நாட்டுக்கோழியின் நன்மைகள்

புரதம் 

100 கிராம் நாட்டுக்கோழியில் 31 கிராம் புரதம் உள்ளது. நாட்டுக்கோழி புரதத்துக்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும்.

நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் அமினோ அமிலங்களால் ஆனது. அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது. 

பொதுவாக, தினசரி புரத உங்கள் எடையில் ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் புரதம் தேவை. நீங்கள் 50 கிலோ என்றால் தினமும் 50 கிராம் புரதம் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். 

வைட்டமின்கள் 

நாட்டுக்கோழியில் உள்ள B வைட்டமின்கள் கண்புரை மற்றும் தோல் கோளாறுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பலவீனத்தை நீக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒற்றைத் தலைவலி, இதயக் கோளாறுகள், நரை முடி, அதிக கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் அவை உதவியாக இருக்கும். நாட்டுக்கோழியில் உள்ள வைட்டமின் D கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும்,

அதனால் எலும்பு வலுவடையும்.  வைட்டமின் A கண்பார்வையை மேன்படுத்தும் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் ஹீமோகுளோபின் உருவாக்க உதவும், மேலும் தசை செயல்பாடு மற்றும் ரத்த சோகையை அகற்ற உதவுகின்றன.