National Tourism Day: சர்வதசே அளவில் புகழ் பெற்ற சுற்றுலதளமாக இருக்கும் இந்தியா.. தேசிய சுற்றுலா தினம் வரலாறு, பின்னணி
National Tourism Day 2025: இந்தியாவின் பல்வேறு விதமான அழகிய நிலப்பரப்புகள், நாட்டின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாவானது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை பிரதிபலிக்கும் நாளாக தேசிய சுற்றுலா தினம் உள்ளது. சிறப்பு மிக்க இந்த நாள் குறித்த வரலாறு, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதை பார்க்கலாம்.

உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு பிரபலமான பயணத் தலமாக இந்தியா உள்ளது. அந்த வகையில் நாட்டின் தேசிய சுற்றுலா தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் நான்கு திசைகளில் இருக்கும் பல்வேறு வகையான அழகிய நிலப்பரப்புகளையும் கௌரவிக்கவும், நாட்டின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாவின் மதிப்பு பற்றிய புரிதலை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் நிலைப்பாட்டில் இந்தியா சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, சுற்றுச்சூழல் சுற்றுலா, கப்பல் பயணங்கள், வணிகம், விளையாட்டு, கிராமப்புறம், கல்வி மற்றும் மருத்துவ பயணம் போன்ற பல்வேறு சுற்றுலா பயண அனுபவங்களை இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் அனுபவிப்பார்கள். பயணம் மற்றும் சுற்றுலா துறையில் பணிபுரியும் ஏராளமான மக்களின் பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வரலாறு முதல் முக்கியத்துவம் வரை, இந்த நாள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் பார்க்கலாம்