National Safety Day 2024: தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்!
National Safety Day 2024: தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்!
தினம் முதல் முக்கியத்துவம் வரை, தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை. இந்த நாள் ஆண்டுதோறும் மார்ச் 4ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
எங்கும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்தவொரு துறையிலும் நாம் பாதுகாப்பாகவும், தகுதியுடனும் இருப்பதை உறுதிசெய்து, அதில் மக்கள் இருப்பதை ஆரோக்கியமானதாக மாற்றுவதுதான் முதன்மை இலக்காகும். அதற்கான நடவடிக்கைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
அது மக்களுக்கு பாதுகாப்பானதா மற்றும் ஆரோக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களாலும் அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
மக்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். அவர்களும் அதை மதித்து கடைபிடிக்க வேண்டும். ஆண்டுதோறும் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையில் உள்ள மனிதனும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதும் இந்த நாளின் நோக்கம்.
இந்த நாளை கடைபிடிக்கும் வேளையில் நாம் மனதில் கொள்ளவேண்டியவை இவைதான்.
தினம்
ஒவ்வொரு ஆண்டும் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் மார்ச் 4ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில், மார்ச் 4ம் தேதி, தேசிய பாதுகாப்பு வாரத்தின் துவக்கமும் மார்ச் 4ம் தேதிதான். இந்தாண்டு தேசிய பாதுகாப்பு தினம் திங்கட்கிழமை அதாவது இன்று வருகிறது.
வரலாறு
1996ம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மார்ச் 4ம் தேதி, தேசிய பாதுகாப்பு கவுன்சிலை அமைத்தது. அது சுயநிதி, தன்னார்வ அமைப்பு ஆகும். 2000மாவது ஆண்டு, தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொது அறக்கட்டளையாக துவங்கப்பட்டது.
1950 பாம்பாய் பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் அது துவங்கப்பட்டது. 1972ம் ஆண்டு தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவான நாளில் அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
முக்கியத்துவம்
தேசிய பாதுகாப்பு தினம் அல்லது தேசிய பாதுகாப்பு வார பிரச்சாரம், 1971ம் ஆண்டு முதல் அது துவங்கிய நாளை கொண்டாடும் வகையில் அந்த நாளிலே கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் இது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சாரம் விரிவானது, பொதுவானது மற்றும் நெகிழ்வானது, பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அவர்களின் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட செயல்பாடுகளை உருவாக்க வேண்டுகோள் விடுக்கிறது என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்