National Garlic Day 2024 : பூண்டு தினத்தில் அதன் நன்மைகளை தெரிந்துகொண்டால், நீங்கள் அதை தவிர்க்க மாட்டீர்கள்!
National Garlic Day 2024 : இது மயக்கம், சோர்வு ஆகியவற்றை போக்குவதற்கு உதவுகிறது. இது உடற்பயிற்சி செய்யும் திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய நோயை குறைக்கும் திறன் கொண்டது.

பூண்டில் உள்ள சத்துக்கள்
100 கிராம் பூண்டில், 149 கிராம் கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 33.1 கிராம், நார்ச்சத்துக்கள் 2.1 கிராம், கொழுப்பு 0.5 கிராம், புரதச்சத்துக்கள் 6.4 கிராம், வைட்டமின் பி6 1.2 மில்லி கிராம், வைட்டமின் சி 31.2 மில்லி கிராம், தியாமின் 0.2 மில்லி கிராம், ரிபோஃப்ளாவின் 0.1 மில்லி கிராம், மாங்கனீசு 1.7 மில்லி கிராம், செலினியம் 14.2 மைக்ரோ கிராம், கால்சியம் 181 மில்லி கிராம், காப்பர் 0.3 மில்லி கிராம், பாஸ்பரஸ் 153 மில்லி கிராம், பொட்டாசியம் 401 மில்லிகிராம், இரும்புச்சத்துக்கள் 1.7 மில்லிகிராம்
பூண்டின் நன்மைகள்
இருமல் மற்றும் சளியை போக்குகிறது
சளி மற்றும் இருமல் தொற்றுக்களை போக்குவதற்கு பச்சை பூண்டு உதவுகிறது. வெறும் வயிற்றில் நசுக்கிய பூண்டு மற்றும் ஒரு கிராம்பை சேர்த்து சாப்பிடும்போது, அது உங்கள் உடலுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கிறது. குழந்தைகளுக்கு பூண்டு மற்றும் கிராம்பை நூலில் கட்டி கழுத்தில் அணிவித்துவிடவேண்டும். இது சளி மற்றும் இருமலின் அறிகுறிகளை குறைக்கிறது.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது
அலிசின், கெட்ட கொழுப்பை தடுக்கிறது. கொழுப்பு அளவைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. பூண்டு உட்கொள்வதை வழக்கமாக செய்தால், ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இது சிறந்தது.
மூளை இயக்கத்தை அதிகரிக்கும்
மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் அதற்கு உதவுகிறது. இது அலைசைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பு தொடர்பான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
பூண்டை, உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலில் செரிமான பிரச்னைகளை அதிகரிக்கிறது. இது வீக்கத்தை குறைத்து, வயிற்றுக்கு நன்மைகளை அளிக்கிறது. பூண்டை பச்சையாக சாப்பிடுவது குடற்புழுக்களை அழிக்கிறது. இது குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்துகிறது
உங்கள் உணவில் பூண்டு உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
டிஎன்ஏ சேதத்தை தடுகிகறது. ஃப்ரி ராடிக்கல்களுக்கு எதிரான பாதுகாப்பை அழிக்கிறது. பூண்டில் உள்ள சிங்க் சத்துக்கள் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து தொற்றுக்களுக்கு எதிராக போராடுகிறது.
கண் மற்றும் காது தொற்றுக்களுக்கு நன்மையளிக்கிறது. இதில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு எதிரான குணங்கள் அதற்கு உதவுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பூண்டு, முகப்பருக்கள் மற்றும் முகப்பருக்களினால் ஏற்படும் தழும்புகளை தடுக்கிறது. சொரியாசிஸ், ராஷ்கள், புண்கள் ஆகியவற்றை குணமாக்க பூண்டுச்சாறு உதவுகிறது. இது புறஊதாக்கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. இதனால் வயோதிகத்தை தாமதப்படுத்துகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது
இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நுரையீரல், புராஸ்டேட், ப்ளாடர், வயிறு, கல்லீரல் மற்றும் குடல் புற்றுநோய்களைத் தடுக்கிறது. பூண்டில் உள்ள ஆன்டிபாக்டீரியல் குணம், குடலில் உள்ள தொற்றும்தன்மையை தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை குறைப்பதில் பயன்படுகிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. ஒரு பூண்டில் மாங்கனீஸ், வைட்டமின் பி6, சி, செலினியம், நார்ச்சத்துக்கள், கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளது.
விளையாட்டுத் திறனை அதிகரிக்கிறது
இது மயக்கம், சோர்வு ஆகியவற்றை போக்குவதற்கு உதவுகிறது. இது உடற்பயிற்சி செய்யும் திறனை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய நோயை குறைக்கும் திறன் கொண்டது.

டாபிக்ஸ்