National Civil Services Day 2024 : தேசிய குடிமைப் பணிகள் தின வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து தெரியவேண்டியவை!

நிறைய குடிமைப்பணியாளர்கள் அவர்களின் பணிகளுக்காக மதிக்கப்படுகிறார்கள். அவர்களின் தீவிர பணிகள், நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்கள் இரவு பகலாக மக்களுக்காக பணிபுரிகிறார்கள்.
நமது நலவாழ்வுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு முக்கியமானது. அவர்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் நம் வாழ்வில் இழப்பு அதிகம். ஒவ்வொரு ஆண்டும், தேசிய குடிமைப்பணிகள் தினம், தங்கள் வாழ்வில் சாதனைகள் புரிந்த குடிமைப்பணி அதிகாரிகளை கவுரவப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
மக்களின் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்காக அவர்கள் செய்த தியாகம் மற்றும் அவர்களின் முன்னெடுப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. நாம் இந்த சிறப்பாக நாளை கொண்டாடும் வேளையில் நாம் நினைவில்கொள்ள வேண்டியவை என்று தெரிந்துகொள்ளுங்கள்.
வரலாறு
இந்திய சுதந்திரத்துக்குப்பின்னர், முதல் முறையாக குடிமைப்பணியாளர்கள் ஆனவர்களை, சர்தார் வல்லபாய் பட்டேல் கவுரவப்படுத்தினார். அப்போது பேசிய அவர், நாட்டில் உள்ள குடிமைப்பணியாளர்களைப் பாராட்டி பேசினார். அந்த உரையில், குடிமைப்பணியாளர்கள் நாட்டின் இரும்பு கவசம் என்றார்.
1947ம் ஆண்டு சர்தார் வல்லபாய் பட்டேல், ஒவ்வொரு ஆண்டும் தேசிய குடிமைப்பணிகள் தினம், குடிமைப்பணியாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், நாட்டில் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். 2006ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி விஞ்ஞான் பவனில், முதல் தேசிய குடிமைப்பணிகள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது முதல் அந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்
தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்பு இரண்டும், நாட்டின் குடிமைப்பணியாளர்களின் உழைப்பில்தான் உள்ளது. இந்த நாள் நாட்டு மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக அவர்களின் கடுமையான உழைப்பை நினைவுகூறும் நாளாக அமைகிறது.
இந்த நாள் குடிமைப்பணியாளர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் நாளாக அமையும். இந்த நாளில் குடிமைப்பணிகளில் ஈடுபட்டு மக்களின் நல்வாழ்வுக்கு உறுதியளிக்கும் அவர்களை நினைவுகூறுவதுடன், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
இந்தாண்டு இந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இதன் நோக்கம், குடிமைப்பணியாளர்களின் பொறுப்புக்களை எடுத்துக்கூறி, மக்களை வெளிப்படையான நிர்வாகம், பொறுப்புணர்வு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது நோக்கமாகும்.
ஒரு குடிமைப்பணியாளர், அவரின் அந்தப்பணிக்கு உரிய சலுகையின் அடிப்படையில் பெருமைமிக்கவராகக் கருதப்படுகிறார். ஒரு குடிமைப்பணியாளருக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல அவர் சமூகத்தின் மீது எத்தனை அக்கறை கொண்டுள்ளார் என்பது மிகவும் முக்கியம் என்று முன்னாள் பிரதமர் நேரு தெரிவித்துள்ளார்.
ஒரு வலுவான செழிப்பான சேதத்தை உருவாக்க ஒரு குடிமைப்பணியாளரின் சேவை மிகவும் முக்கியம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நமது சேதம் நமது மக்களால் வரையறுக்கப்படுகிறது.
எல்லையால் அல்ல. நாம் நமது குடிமைப்பணியாளர்கள் இந்த பெருமையைக் கொள்கிறார். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்கப்பணி நமது நாடு சிறக்க வாய்ப்பளிக்கிறது என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறிப்பிட்டுள்ளார்.

டாபிக்ஸ்