ஷேக்ஸ்பியரின் கதாநாயகிகளில் இருந்து உங்கள் தேவதைகளுக்கான பெயர்கள்! இதோ பட்டியல்!
இதோ உங்கள் செல்ல மகள்களுக்கு ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரத்தில் இருந்து இந்த பெயர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

ஷேக்ஸ்பியரின் கதாநாயகிகளிடம் இருந்து உங்கள் பெண் குழந்தைகளுக்கான பெயர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா? இதோ அந்த கொகுப்பைப் பாருங்கள். இந்தப் பெயர்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தும் பெயர்களாகும். இவை ஷேக்ஸ்பியரின் ஆதர்ஷ கதாநாயகிகள் ஆவார்கள். இந்தப்பெயர்களுக்கு நல்ல அர்த்தங்களும் உள்ளன. வலு, நளினம், ஆற்றல் போன்ற ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்ட பெயர்கள். இந்த பெயர்களில் சில கதாநாயகிகள் வரலாற்றில் மறக்க முடியாதவர்களாக இன்னும் வாழ்கிறார்கள். இந்தப்பெயர்கள் உங்கள் பெண் குழந்தைகளுக்கு நேர்த்தியான பெயராக இருக்கும்.
ஜூலியட்
ரோமியோவின் காதலி, உலகம் முழுவதும் பிரபலமான பெயர். இந்தப் பெயருக்கு அன்பின் அடையாளம், அழகு மற்றும் அப்பாவி என்று பொருள். இது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட பெயராகும். இந்தப்பெயர் உலக மாந்தரின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இதற்கு காதல் என்ற அரத்தமும் உள்ளது. இது உங்கள் பெண் குழந்தைக்கு நேர்த்தியான, அன்பாக தோற்றத்தைத்தரும்.
ரோசாலிண்ட்
ரோசாலிண்ட், என்ற பெயர் ‘ஆஸ் யூ லைக் இட்’ என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்ட பெயராகும். இது வலுவான மற்றும் சுயமான கதாபாத்திரம் ஆகும். இந்தப்பெயர் ப்ரைட்டான, தன்னம்பிக்கையான குழந்தைக்கு ஏற்ற பெயராகும். கவர்ந்திழுக்கக்கூடிய குணம் கொண்ட நபர் என்பதையும் இந்தப் பெயர் குறிக்கிறது.