கிரேக்க பெண் தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்கள்! உங்கள் வீட்டு தேவதைகளுக்கு சூட்டுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கிரேக்க பெண் தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்கள்! உங்கள் வீட்டு தேவதைகளுக்கு சூட்டுங்கள்!

கிரேக்க பெண் தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்கள்! உங்கள் வீட்டு தேவதைகளுக்கு சூட்டுங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 29, 2024 11:33 AM IST

கிரேக்க பெண் தெய்வங்களின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் குழந்தைகளுக்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

கிரேக்க பெண் தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்கள்! உங்கள் வீட்டு தேவதைகளுக்கு சூட்டுங்கள்!
கிரேக்க பெண் தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட பெயர்கள்! உங்கள் வீட்டு தேவதைகளுக்கு சூட்டுங்கள்!

நைக்

நைக் என்றால், கிரேக்க பெண் தெய்வத்தின் பெயர். இது வெற்றி, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் பெயராகும். உங்கள் குழந்தைகளுக்கு நைக் என்று பெயர் சூட்டினால் அவர்கள் சாதனையாளர்கள் ஆவார்கள். விடாமல் முயன்று எதையும் வெல்பவர்களாக அவர்கள் இருப்பார்கள். பல துன்பங்களையும் கடந்து ஓடும் நபர்களாக அவர்கள் இருப்பார்கள்.

அத்தீனா

அத்தீனா என்பதும் ஒரு பெண் கடவுளின் பெயராகும். இதற்கு ஞானம் மற்றும் போர் என்று பொருள். அறிவு, பலம், தைரியம் ஆகியவற்றை குறிக்கும். ஞானம், சிந்தனை மற்றும் தைரியம் ஆகியவற்றை குறிக்கும் வகையில் பெயர் வைக்க ஆசைப்பட்டால் நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை தேர்ந்தெடுக்கலாம். இந்தப்பெயர் எல்லா காலத்திலும் நவீனமாக இருக்கும். இது உங்கள் குழந்தைக்கான சிறந்த தேர்வாகவும் இருக்கும்.

ஹீரா

ஹீரா என்றால் குடும்பம் மற்றும் திருமணத்தை குறிக்கு பெண் தெய்வங்கள் மற்றும் தெய்வத்தின் ராணி என்று பொருள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் இந்தப்பெயரை சூட்டும்போது, அது தலைமைப்பண்பு மற்றும் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

அப்போலோ

அப்போலோ என்றால், கிரேக்க இசையின் கடவுள், ஆற்றப்படுத்தும் குணம் கொண்ட நபர், கிரியேட்டிவிட்டி மற்றும் தீர்க்கதரிசி, ஞானம் என்ற பொருள்களை தரக்கூடியது. இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது அவர்களுக்கு கலையுடன் தொடர்புடையவர்கள் என்பதைக் குறிக்கிறது. அறிவைத் தேடுபவர் என்பதைக் குறிக்கிறது. ஆழ்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்க்கையின் மிகவும் மகிழ்வான பக்கம் என்பதைக் குறிக்கிறது.

ஹெஸ்ஷியா

ஹெஸ்ஷியா, கிரேக்க பெண் கடவுளின் பெயர். இது இதமான, குடும்பம் மற்றும் இணைந்து இருத்தல் என்று பொருள். இந்தப்பெயர் நற்குணத்தை வளர்த்தெடுக்கும், மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் என்ற அர்த்தத்தை தரும் பெயராகும்.

பெர்சஃபோன்

பெர்சஃபோன் என்றால் வசந்த காலத்தின் பெண் தெய்வம் என்று பொருள். புதுப்பித்தல் மற்றும் மாற்றம் என்ற பொருளைத் தரும். உங்கள் குழந்தைக்கு பெர்சஃபோன் என்ற பெயரை தேர்ந்தெடுத்தால், அதற்கு பாராட்டு, வளர்ச்சி, மீண்டெழுதல் மற்றும் வாழ்க்கையின் சூழற்சி என்று பொருள்.

அர்டெமிஸ்

அர்டெமிஸ் என்றால், கிரேக்கத்தின் பெண் தெய்வம் என்று பொருள். இது வேட்டையாடுவது மற்றும் பரந்த என்ற பொருளைத் தருகிறது. இது பலம், சுதந்திரம் மறறும் ஆழ்ந்த தொடர்பு என்பதைக் குறிக்கிறது. இந்தப்பெயரை உங்கள் பெண் குழந்தைக்கு வைப்பது, சக்திவாய்ந்த பெண் தெய்வத்தின் பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்துள்ளீர்கள் என்று பொருள். இதற்கு சாதிப்பவர் என்று பொருள். அவர்களின் அழகையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்.

கயா

கயா என்பது கிரேக்க பெண் தெய்வத்தின் பெயர். இதற்கு வளர்த்தல், வளர்த்தெடுத்தல் மற்றும் வாழ்வின் சாரம் என்று பொருள். இந்தப்பெயரை உங்கள் பெண் குழந்தைக்கு தேர்ந்தெடுக்கும்போது, அது உங்கள் குழந்தைக்கு இயற்கையுடன் ஆழ்ந்த தொடர்பை உருவாக்குகிறது. இயற்கை தரும் கொடையையும் இந்தப்பெயர் குறிப்பிடுகிறது.

ஹெர்மெஸ்

ஹெர்மெஸ் என்பது கிரேக்க பெண் தெய்வத்தின் பெயராகும். இது உரையாடல், திறன் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு தேர்ந்தெடுத்தால், அது அவர்களுக்கு விரைந்து சிந்திக்கவும், ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெற்ற நபராக அவர் இருப்பதற்கும், நடைமுறைக்கு சாத்தியத்தியமானதை செய்யக்கூடிய மற்றும் உண்மையான நபராக இருப்பார்.

டியோனிசஸ்

டியோனிசஸ், இந்தப்பெயர் வைன் கடவுளின் பெயராகும். கொண்டாட்டம், மகிழ்ச்சி மற்றும் போராட்டம் என்பதை குறிக்கும். இது தொடர்ச்சியானவர் என்பதைக் குறிக்கும். விழா, கடவுளுடன் தொடர்புடையவர் என்பதையும் குறிக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.