தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Myths About Masturbation : அடிக்கடி சுயஇன்பம் கொள்பவரா? எனில் இதப்படிங்க மொதல்ல! கட்டுக்கதைகளை தகருங்க!

Myths about Masturbation : அடிக்கடி சுயஇன்பம் கொள்பவரா? எனில் இதப்படிங்க மொதல்ல! கட்டுக்கதைகளை தகருங்க!

Priyadarshini R HT Tamil
May 06, 2024 05:55 AM IST

Myths about Masturbation : சுயஇன்பம் அளவாக நல்லது. ஆனால் இதுகுறித்த கட்டுக்கதைகள் என்ன?

Myth about Masturbation : அடிக்கடி சுயஇன்பம் கொள்பவரா? எனில் இதப்படிங்க மொதல்ல! கட்டுக்கதைகளை தகருங்க!
Myth about Masturbation : அடிக்கடி சுயஇன்பம் கொள்பவரா? எனில் இதப்படிங்க மொதல்ல! கட்டுக்கதைகளை தகருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்புறுப்புகளை தூண்டு தங்களுக்கு தாங்களாவே செக்ஸ்வல் இன்பத்தை அளித்துக்கொள்வது சுய இன்பம் எனப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அதை செய்வார்கள் மற்றும் சிலர் அதுகுறித்து அதிகம் பேசுவார்கள். 

பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள கிளிட்டோரியஸ் என்ற உறுப்பை தூண்டுவதன் மூலம் பெண்களும், பீனிஸை தூண்டுவதன் மூலம் ஆண்களும் சுய இன்பம் பெறமுடியும்.

ஆர்கஸம் கிடைத்தவுடன் நிறுத்தப்படுகிறது. இது செக்ஸ்வல் திருப்தியை மட்டும் கொடுக்கவில்லை. மனஅழுத்தத்தை குறைக்கிறது. மனநிலையை மாற்றுகிறது. நல்ல உறக்கத்துக்கும் வழிவகுக்கிறது.

சுய இன்பம் குறித்து சில எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. இதுகுறித்த கட்டுக்கதைகளும் நிறைய உள்ளது. அதனால் இதுகுறித்து பேசுவது அல்லது செய்வது குற்றமாகவும், அவமானமாகவும் கருதப்படுகிறது. சில கலாச்சாரங்களில் இது உடல் மற்றும் மனரீதியான அவமானமாக கருதப்படுகிறது.

செக்ஸ்வல் இன்பத்துக்காக நாமே நமது பிறப்புறுப்புக்களை தூண்டுவது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இது பொதுவானது என்றும், 65 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் இதைச் செய்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. சுயஇன்பம் செய்வதற்கு வயது மற்றும் பாலினம் வேறுபாடு இல்லை.

சுயஇன்பம் ஆழ்ந்த உறக்கம், மனஅழுத்தத்தில் இருந்து நிவாரணம், மனநிலை மாற்றம், வலி நிவாரணம், செக்ஸ்வல் திருப்தி என பல்வேறு நன்மைகளைக் கொடுத்தாலும், அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதான், அது இந்த சுயஇன்பத்துக்கும் பொருந்தும். சுயஇன்பத்தை அளவாக அனுபவிக்கும்போது, அது உங்களுக்கு மேற்கண்ட நன்மைகளைக் கொடுக்கிறது. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் என்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. 

சுயஇன்பம் கொள்வது குறித்தான கட்டுக்கதைகள் என்ன?

கன்னித்தன்மை குறையும்

பெண்களுக்கு பிறப்புறுப்பில் உள்ள ஹைமன் என்ற பகுதி உடைந்தால், கன்னித்தன்மை என்று உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. ஆனால் அது கிடையாது. 

கன்னித்தன்மையுடன் இருப்பது தானாக தூண்டப்படுவது கிடையாது, அது முதல் முறை உடலுறவு கொள்ளும்போது ஏற்படுவது என சமூக மற்றும் கலாச்சாரங்கள் குறிப்பிடுகின்றன. 

கன்னித்தன்மை என்பது ஒருமுறைகூட செக்ஸ் வைத்துக்கொள்ளாத நிலையாகும். சுயஇன்பம் என்பது இயற்கையான மற்றும் பொதுவான ஒரு செக்ஸ்வல் வெளிப்பாடு ஆகும். இதனால் கன்னித்தன்மை பாதிக்கப்படாது.

சுயஇன்பம் உடல் ரீதியான கஷ்டங்களை ஏற்படுத்தும்

சுயஇன்பம் பார்வையிழப்பு, குழந்தையின்மை, விறைப்புத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. 

சுயஇன்பம் ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நடவடிக்கை, இதில் உடல் நலனுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. ஆனால் சரியான முறையில் பாதுகாப்புடன் தேவையான அளவு மட்டுமே செய்யவேண்டும்.

மனநலக்கோளாறு

மனநலக்கோளாறு பிரச்னைகளால் சுயஇன்பம் கொள்ள நினைப்பதில்லை. ஒருவருக்கு சுயஇன்பம் என்பது, சில மனநல பிரச்னைகள் ஏற்படும்போது, அவர்கள் சுயஇன்பம் கொள்கிறார்கள். 

ஆனால் சுயஇன்பம் என்பது, பொதுவான செக்ஸ்வல் நடவடிக்கை அதை அனைத்து தரப்பினரும், அனைத்து வயதிலும் செய்கிறார்கள்.

சுயஇன்பம், உடலுறவு இன்பத்தை குறைக்கிறது

சுயஇன்பம், உடலுறவு இன்பத்தை குறைப்பதில்லை. ஆனால் நீங்கள் அடிக்கடி செய்யக்கூடாது. ஒருவரி உடல் மற்றும் செக்ஸ்வல் நடவடிக்கைகளுக்கு அவர்களின் உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படும் வழிகளுள் ஒன்று. இதனால் துணையுடன் உடலுறவு கொள்ளும்போது, செக்ஸ்வல் இன்பத்தை அதிகரிக்கச்செய்யும்.

சுயஇன்பம் ஆரோக்கியமற்ற செக்ஸ்வல் வெளிப்பாடு

சுயஇன்பம் என்பது, மனித செக்ஸ்வல் நடவடிக்கைகளுள் இயல்பான ஒன்று. இது இன்பத்தையும், திருப்தியையும் தருகிறது. இது உங்களுக்கு இன்பமான நிலை எது என்பதை கணிக்க உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் உங்கள் இணையரிடம் உங்களுக்கு என்ன தேவை என்பதை தெரியப்படுத்த முடியும்.

சுயஇன்பத்தை தவிர்க்க முடியுமா?

சுயஇன்பம் என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. அதை அவர்கள் செய்யாமல் இருப்பதும் அவர்கள் விருப்பம். பெரும்பாலானவர்களுக்கு சுயஇன்பம் என்பது வழக்கமான மற்றும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கலாம். 

சிலர் துணை இல்லாமல் சுயஇன்பத்தில் ஈடுபடுவார்கள் அல்லது சிலருக்கு துணை அருகில் இருக்கமாட்டார்கள் என்பதால் சுயஇன்பம் பெறுவார்கள்.

எனினும், இது அன்றாட வாழ்க்கையில் தலையிடவே செய்கிறது. துன்பம் தருகிறது, கட்டாயம் செய்யவேண்டிய நிலைக்கு அழைத்துச் செல்கிறது. 

இதனால் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே உங்கள் மீதான அக்கறை, உரையாடல் மற்றும் செக்ஸ் குறித்த ஆரோக்கியமான புரிதல் ஆகியவை தேவை.

WhatsApp channel

டாபிக்ஸ்