மைசூர் மசால் தோசை : சாதாரணமானது அல்ல; இது மைசூர் மசாலா தோசை; இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மைசூர் மசால் தோசை : சாதாரணமானது அல்ல; இது மைசூர் மசாலா தோசை; இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

மைசூர் மசால் தோசை : சாதாரணமானது அல்ல; இது மைசூர் மசாலா தோசை; இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 10, 2025 12:10 PM IST

மைசூர் மசால் தோசை : இந்த மைசூர் மசாலா தோசையை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு பெரும்பாலும் தொட்டுக்கொள்ளவென்று எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் தேங்காய்ச் சட்னிதான் சிறந்தது.

மைசூர் மசால் தோசை : சாதாரணமானது அல்ல; இது மைசூர் மசாலா தோசை;  இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!
மைசூர் மசால் தோசை : சாதாரணமானது அல்ல; இது மைசூர் மசாலா தோசை;  இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• உருளைக்கிழங்கு – 2

• சின்ன வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

மசாலா செய்வது எப்படி?

இரண்டு உருளைக்கிழங்கையும் நன்றாக வேகவைத்து தோல் நீக்கி மசித்துஎடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும். சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அது பொன்னிறமானவுடன், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இதை இறக்கி தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். இது ஒரு மசாலா ஸ்டஃபிங் ஆகும்.

மைசூர் மசாலா தோசைக்கான ஸ்பெஷல் காரச் சட்டி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

• வர மிளகாய் – 2

• சின்ன வெங்காயம் – 15

• சீரகம் – கால் ஸ்பூன்

• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

(வர மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு என அனைத்தும் சேர்த்து அப்படியே பச்சையாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்)

• தோசை மாவு – ஒரு கப்

செய்முறை

தோசைக்கல்லை சூடாக்கி, அதில் ஒரு கப் மாவை மெல்லிசாக ஊற்றவேண்டும். அதில் காரச்சட்னியைத் தடவவேண்டும். அடுத்து அதன் மேல் காரச்சட்னியை தடவவேண்டும்.

அடுத்து உருளைக்கிழங்கு மசாலாவையும் நன்றாக ஸ்பிரட் செய்துவிடவேண்டும். ஒரு புறம் பொன்னிறமாக வெந்தவுடன், அதை மடித்து வேகவிடவேண்டும்.

இந்த தோசைக்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட சுவை அள்ளும். இதை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மைசூர் மசாலா தோசையை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு பெரும்பாலும் தொட்டுக்கொள்ளவென்று எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் தேங்காய்ச் சட்னிதான் சிறந்தது.