Mutton Samosa: ‘ஈவினிங் ஆகிடுச்சு.. ஸ்நாக்ஸ் செய்யலாமா?’ மயக்கும் மட்டன் சமோசா ரெடி பண்ணலாமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mutton Samosa: ‘ஈவினிங் ஆகிடுச்சு.. ஸ்நாக்ஸ் செய்யலாமா?’ மயக்கும் மட்டன் சமோசா ரெடி பண்ணலாமா?

Mutton Samosa: ‘ஈவினிங் ஆகிடுச்சு.. ஸ்நாக்ஸ் செய்யலாமா?’ மயக்கும் மட்டன் சமோசா ரெடி பண்ணலாமா?

Stalin Navaneethakrishnan HT Tamil
Jul 10, 2023 04:19 PM IST

Samosa: சுடச்சுட.. அதே நேரத்தில் சுவையான ஸ்நாக்ஸ் வேண்டும் என்றால், மட்டன் சமோசாவை விட வேறு என்ன வேண்டும்?

மட்டன் சமோசா செய்முறை விளக்கம்
மட்டன் சமோசா செய்முறை விளக்கம்

மட்டன் கொத்து செய்ய தேவையான பொருட்கள்:

  • மட்டன்( எலும்பு இல்லாதது) -300 கிராம்
  • பூண்டு- 3 பற்கள்
  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய்-3
  • பெரிய வெங்காயம் -1
  • புதினா கொஞ்சம்
  • கொத்துமல்லி இலை

மட்டன் கொத்து செய்முறை:

மட்டனை மிக்ஸ் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பாதிக்கும் மேல் அரைந்த பின், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு சேர்த்து அரைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதனுடன் பெரிய வெங்காயத்தை போட்டு அரைக்க வேண்டும். இப்போது கிட்டத்தட்ட மட்டன் உள்ளிட்ட அனைத்தையும் நன்றாக அரைந்து போயிருக்கும். இப்போது புதினா மற்றும் கொத்துமல்லி சேர்த்து இறுதியாக ஒரு அரைப்பு அரைத்து கொள்ள வேண்டும். ஜாரில் இருந்து மட்டன் கலவையை எடுத்து வைத்துக் கொள்ளவும். 

சமோசாவின் மேல் பகுதி தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • மைதா -2 கப்
  • உப்பு - அரை தேக்கரண்டி
  • சர்க்கரை- 1 தேக்கரண்டி
  • நெய்- 3 தேக்கரண்டி
  • தேவையான அளவு தண்ணீர்
  • நெய் அல்லது எண்ணெய்

செய்முறை:

மைதா, உப்பு, சர்க்கரை, நெய் போட்டு தண்ணீர் இல்லாமல் ஒரு முறை மிக்ஸ் செய்யவும். அரைக்க அரைக்க கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றவும். பிடிக்கும் படியாக மாவு பதம் வந்ததம், அதை உருட்டி, அதன் மேல் நெய் அல்லது எண்ணெய் தடவவும். 

மட்டன் சமோசா தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • அரைத்த மட்டன் கலவை
  • எண்ணெய்
  • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • தனியா தூள்-கால் தேக்கரண்டி
  • சீரக தூள்- அரை தேக்கரண்டி
  • உப்பு- 1 தேக்கரண்டி
  • தண்ணீர் தேவைக்கு ஏற்ப
  • பொரிக்க தேவையான எண்ணெய்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்த மசாலா கலவையை அதனுள் போட்டு கிண்டவும். சிறிது நேரம் கழித்து மல்லி, மஞ்சள், மிளகாய், சீரகம், உப்பு போட்டு மிக்ஸ் செய்யவும். மட்டனில் உள்ள ஈரம் போகும் வரை குறைந்த வெப்பத்தில் வைத்து வேக வைக்கவும். மட்டன் உலர்ந்ததும், இறக்கவிடவும். இப்போது ஏற்கனவே பிசைந்து வைத்த மைதாவை சிறிது சிறிதாக உருட்டி, அதை தேய்த்து, அதனுள் மட்டன் மிக்ஸ் வைத்து மடிக்கவும். சூடான எண்ணெய் பாத்திரத்தில் அதை போட்டு, பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்கவும். இப்போ சூடான மட்டன் சமோசா ரெடி!

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.