Mutton Fry : வெங்காயம் இல்லாத மட்டன் வறுவல்; மயக்கும் சுவையில் செய்வது எப்படி?
Mutton Fry : வெங்காயம் இல்லாத மட்டன் வறுவல்; மயக்கும் சுவையில் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
மட்டன் – முக்கால் கிலோ
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2
பட்டை – 2
கிராம்பு – 4
சோம்பு – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன்
மல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
செய்முறை
குக்கரில் மட்டன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள், இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
கறி மூழ்கும் வரை மட்டும்தான் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதிகம் தண்ணீர் ஊற்றினால் சுவை நன்றாக இருக்காது. எனவே மட்டன் மூழ்கும் வரை தண்ணீரி வைத்து 15 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.
குக்கர் இல்லாமலும் பாத்திரத்தில் வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம். முக்கால் மணி நேரம் வேகவைக்க வேண்டும்.
எப்படி வேகவைத்து எடுத்தாலும், தாளித்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை, சோம்பு, வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், அதில் தண்ணீரை வடித்துவிட்டு கறியை மட்டும் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர், தண்ணீரை சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும். அனைத்தும் வெந்து தண்ணீர் சுண்டியவுடன், அதில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூளை சேர்க்க வேண்டும். பின்னர் மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன் வறுவல் தயார்.
இதை சாதம், சாப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
ஆட்டுக்கறி சில தகவல்கள்
மட்டனில் சாச்சுரேடட் கொழுப்பு குறைவாக உள்ளது.
இதில் அதிகளவில் உள்ள லினோலைக் அமிலம் என்ற கொழுப்பு அமிலம், அலர்ஜியை தடுக்கிறது.
இதில் அதிகளவில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி12 சத்து உள்ளது.
இதை சரிவிகித உணவு உண்பவர்களும், ஆரோக்கிய வாழ்க்கை வாழ நினைப்பவர்களும் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை வறுவல், குழம்பு, பேக் செய்து, சூப் செய்து என பல வழிகளில் சாப்பிடலாம். இதை போதிய தண்ணீர் வைத்து, மெதுவாக குறைவான தீயில் சமைத்தால், மிருதுவாக வெந்துவரும்.
இதில் குறைவாக கொழுப்பே உள்ளது. எனவே இதை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.
சிலருக்கு ஆட்டு மூளை பிடிக்காது. ஆனால், அதில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இதில் உள்ள புரதச்சத்துக்கள் உங்கள் பசியை நீண்ட நேரம் கட்டுப்படுத்தி வைக்கும் திறன் கொண்டது. இதனால், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, உங்கள் உடல் எடை பராமரிக்க உதவுகிறது.
இதில் உள்ள புரதச்சத்து உடல் எலும்பை உற்பத்தி செய்ய உதவுகிறது. திசுக்களை சேதமாக்குகிறது. சருமம், தசைகள் மற்றும் ரத்தம் என அனைத்தின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
இதில் புரதம், ஆரோக்கிய கொழுப்பு, கலோரிகள் ஆகிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில் ஆட்டுக்கறி முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே ஆட்டு இறைச்சியை அடிக்கடி சேர்த்து உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்