தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Mutton Fry: Mouthwatering Mutton Fry.. Very Nutritious For Kids!

Mutton Fry: பாத்தாலே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் வறுவல்.. குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 30, 2024 01:04 PM IST

மட்டன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இதில் வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி9, பி12 உள்ளது. கர்ப்பிணிகள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது மிகவும் அவசியம். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நரம்புக் குழாய் பிரச்சனை வராது. ஆட்டிறைச்சியில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்கும்.

மட்டன் வறுவல்
மட்டன் வறுவல் (Dindigul Food Court/youtube)

ட்ரெண்டிங் செய்திகள்

மட்டன் வறுவல் செய்முறைக்கு தேவையான பொருட்கள்

மட்டன் - அரைக்கிலோ

மிளகாய்தூள் - இரண்டு ஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை - கொத்து

எண்ணெய் - போதுமானது

காய்ந்த மிளகாய் - நான்கு

கரம் மசாலா - ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - மூன்று ஸ்பூன்

பச்சை மிளகாய் - மூன்று

உப்பு - சுவைக்க

மட்டன் வறுவல் பொரியல் செய்முறை

1. இந்த மட்டன் வறுவல் செய்வதற்கு மென்மையான ஆட்டிறைச்சியைத் தேர்வு செய்யது கொள்ள வேண்டும். அதை சிறு துண்டுகளாக நறுக்கி பின் சுத்தமாக கழுவி ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.

2. அந்த பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

3.இதை ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று மணி நேரம் ஊற விட வேண்டும்.

4. இப்போது இந்த மட்டன் துண்டுகளை குக்கரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரும் வரை வைக்கவும்.

5. இப்போது கடாயை அடுப்பில் வைத்து தாராளமாக எண்ணெய் விட வேண்டும்.

6. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், செங்குத்தாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.

8. வேகவைத்த தண்ணீருடன் மட்டன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

9. கால் மணி நேரத்தில் தண்ணீர் வற்றி விடும். பின்னர் மட்டன் துண்டுகளை சிறிய தீயில் வதக்கவும்.

10. மேலே கரம் மசாலாவை சேர்த்து அதன் மேல் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

11. அவ்வளவுதான் ஸ்பைசி மட்டன் வறுவல் ரெடி. பார்க்கும் போதே சாப்பிட ஆசை வரும்.

ஆட்டிறைச்சியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாரம் ஒருமுறையாவது மட்டன் ரெசிபிகளை சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி9 மற்றும் பி12 உள்ளது. இதில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே உள்ளது. கர்ப்பிணிகள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது மிகவும் அவசியம். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நரம்புக் குழாய் பிரச்சனை வராது. ஆட்டிறைச்சியில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்கும். எனவே வாரம் ஒருமுறை மட்டன் சாப்பிடுவது நல்லது.

WhatsApp channel