மட்டன் பிரியாணி : பாய் வீட்டு மட்டன் பிரியாணி; சுவையில் ஆளை அசத்துமல்லவா? இதோ எப்படி செய்வது பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மட்டன் பிரியாணி : பாய் வீட்டு மட்டன் பிரியாணி; சுவையில் ஆளை அசத்துமல்லவா? இதோ எப்படி செய்வது பாருங்கள்!

மட்டன் பிரியாணி : பாய் வீட்டு மட்டன் பிரியாணி; சுவையில் ஆளை அசத்துமல்லவா? இதோ எப்படி செய்வது பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Published May 12, 2025 01:01 PM IST

மட்டன் பிரியாணி : இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா இருந்தலே போதும். சுவையில் அடித்து நொருக்கும். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மட்டன் பிரியாணி : பாய் வீட்டு மட்டன் பிரியாணி; சுவையில் ஆளை அசத்துமல்லவா? இதோ எப்படி செய்வது பாருங்கள்!
மட்டன் பிரியாணி : பாய் வீட்டு மட்டன் பிரியாணி; சுவையில் ஆளை அசத்துமல்லவா? இதோ எப்படி செய்வது பாருங்கள்!

தேவையான பொருட்கள்

• மட்டன் – அரை கிலோ

• பாஸ்மதி அரிசி – கால் கிலோ

• தக்காளி – 2 (நீளவாக்கில் நறுக்கியது)

• பெரிய வெங்காயம் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)

• தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

• இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

• எலுமிச்சை பழச்சாறு – 4 ஸ்பூன்

• மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

• புதினா – ஒரு கைப்பிடியளவு

• பச்சை மிளகாய் – 6

• பட்டை – 2 துண்டு

• கிராம்பு – 4

• ஏலக்காய் – 2

• ஸ்டார் சோம்பு – 1

• பிரியாணி இலை – 1

• மிளகாய்த் தூள் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

• எண்ணெய் – தேவையான அளவு

• உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாகக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

2. அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஸ்டார் சோம்பு, அன்னாசிப் பூ சேர்த்து தாளிக்கவேண்டும்.

3. பின்னர் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

4. அடுத்து அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். இதில் பச்சை வாசம் போனவுடன், தயிரை சேர்த்து கலக்கவேண்டும்.

5. அடுத்து தக்காளியை சேர்த்து குழைய வதக்கவேண்டும். அடுத்து புதினா, மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

6. அடுத்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

7. அடுத்து சுத்தம் செய்துள்ள மட்டனை சேர்த்து நன்றாகப் பிரட்டி, எலுமிச்சை பழச்சாறு சேர்த்து, சில நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக்கொள்ளவேண்டும்.

8. ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு, அது கொதித்தவுடன், அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, புதினா சேர்க்கவேண்டும். அதோடு ஊறிய அரிசியையும் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் உப்பும் சேர்த்து சரியாக 10 நிமிடம் மட்டும் வெந்தவுடன் வடித்துக்கொள்ளவேண்டும்.

9. வடித்த நீரை வைத்துக்கொள்ளவேண்டும்.

10. தண்ணீரை வடித்த பின்னர் குக்கரில் உள்ள மட்டனை அப்படியே சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவேண்டும்.

11. பின்னர் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி குக்கரை வைத்து, காற்று புகாதவாறு ஒரு தட்டு கொண்டு மூடிவேண்டும். அதன் மேல் அரிசி வடித்த தண்ணீரை வைத்து குறைவான தீயில் 20 நிமிடங்கள் தம் போட வேண்டும். தம்மில் இருந்து இறக்கினால் சூப்பர் சுவையான பாய் வீட்டு பிரியாணி தயார்.

இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா இருந்தலே போதும். சுவையில் அடித்து நொருக்கும். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.