Truth About Mutton: ’மட்டன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா?’ மருத்துவர்கள் சொல்லும் உண்மை என்ன?
“முதலில் மட்டன் என்று நாம் சொல்லும் சொல்லாடலில் செம்மறி ஆடு (Sheep), இளம் செம்மறி ஆடு (lamb), வெள்ளாடு (goat) ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”

மட்டன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.
கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரலில் உருவாக கூடிய செல் மெம்ரைனில் சிமெண்ட் போன்ற வேதி பொருள் ஆகும். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மில்லி கிராம் அளவுக்கு கொலஸ்ட்ரால் நமது உடலுக்கு தேவைப்படுகிறது.
கொலஸ்ட்ரால் என்பதும் கொழுப்பு என்பது வேறு என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
மட்டன், பீப், போர்க் ஆகியவற்றை சிகப்பு இறைச்சி என கூறுகிறோம். மீன், சிக்கன் ஆகியவற்றை வெள்ளை இறைச்சை என கூறுகிறோம்.
நமது ஊரை பொறுத்தவரை பெரும்பாலானோருக்கு Triglyceride என்ற கொழுப்புதான் அதிகமாக இருக்கும்.
Triglyceride வகை கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் அசைவ உணவுகளை அதிகமாக சாப்பிட்டு, மாவுச்சத்துக்களைதான் குறைக்க வேண்டும். இவர்கள் இட்லி, தோசை, சர்க்கரை, நொறுக்குத்தீனி ஆகியவற்றை சாப்பிடுவதை குறைப்பது அவசியம்.
உங்கள் உடலில் Triglyceride அதிகமாக இருந்தால் உங்கள் உடலில் மாச்சத்தை ஜீரணிக்க செய்யும் திறன் குறைவாக உள்ளது, இன்சுலின் எதிர்புத்தன்மை அதிகமாக இருக்கிறது என்று பொருள்.
முதலில் மட்டன் என்று நாம் சொல்லும் சொல்லாடலில் செம்மறி ஆடு (Sheep), இளம் செம்மறி ஆடு (lamb), வெள்ளாடு (goat) ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
100 கிராம் கொண்ட ஆட்டிறைச்சியில் கொலட்ராலின் அளவு செம்மறி ஆட்டுக்கறியில் 136 மில்லி கிராமும், இளம் செம்மறி ஆட்டுக்கறியில் 120 மில்லி கிராமும், வெள்ளாட்டு கறியில் 80 மில்லி கிராமும் கொலஸ்ட்ரால் உள்ளது.
தோலோடு எந்த சிக்கன் சாப்பிட்டாலும் 100 கிராமில் 73 மில்லி கிராம் கொலஸ்ட்ராலும், தோல் நீக்கப்பட்ட சிக்கனில் 55 மில்லி கிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது.
மீனில் 50 மில்லி கிராம் கொலஸ்ட்ராலும், மாட்டிறைச்சியில் 90 மில்லி கிராம் கொலஸ்ட்ராலும், பன்றி இறைச்சியில் 75 மில்லி கிராம் கொலஸ்ட்ராலும், பாலில் 38 மில்லி கிராம் கொலஸ்ட்ராலும் உள்ளது.
ஆனால் ஒரு நாளைக்கே நமது உடலுக்கு 2 ஆயிரம் மில்லி கிராம் கொலஸ்ட்ரால் தேவைப்படும் நிலையில் 100 கிராம் முதல் 150 கிராம் வரையிலான மேற்கண்ட இறைச்சிகளை சாப்பிடுவது தாக்கத்தை ஏற்படுத்தாது என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
ஆனால் இதே இறைச்சிகளில் உள்ள நிறை கொழுப்புகள் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் தன்மை உடையது என்கிறார். ஆனால் அதுவும் இந்த கொலஸ்ட்ராலை ப்ராசஸ் செய்ய முடியாத என்சைன் குறைபாடு உள்ளவர்களுக்கானது என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
இவர்கள் இந்த நிறை கொழுப்பு மிகுந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
நிறை கொழுப்புகளை பொறுத்தவரை 100 கிராம் கொண்ட பன்றி மற்றும் மாட்டிறைச்சியில் 5 முதல் 5.5 கிராம் வரையிலான நிறை கொழுப்புகள் உள்ளது.
செம்மறி ஆட்டுக்கறியில் 4.6 கிராம் நிறை கொழுப்புக்கள் உள்ளன. வெள்ளாட்டுக்கறியில் 3 கிராம் நிறைக் கொழுப்புகள் உள்ளது.
ஆனால் தோலோடு சாப்பிடப்படும் சிக்கனில் 2.3 கிராம் நிறை கொழுப்புகளும், தோல் நீக்கப்பட்ட சிக்கன் மற்றும் மீனில் 0.9 கிராம் நிறை கொழுப்புகளும் உள்ளன.
முட்டையில் 1.5 கிராம் நிறை கொழுப்புகளும், 250 மில்லி லிட்டர் பாலில் 4.9 கிராம் நிறை கொழுப்புகள் உள்ளது.
LDL கொலஸ்ட்ரால் மிகவும் அதிகமாக கூடிய தன்மை உள்ளவர்கள் மட்டும் அதிக கொழுப்பு உள்ள செம்மறி ஆட்டுக்கறியையோ அல்லது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றை குறைக்கலாம்.
ஆனால் Triglyceride கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களோ அல்லது LDL கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளவர்களையோ மட்டன் சாப்பிட வேண்டாம் என்று சொல்வதில் எந்த லாஜிக்கும் கிடையாது என்பது மருத்துவர் அருண்குமார் கூறும் அறிவுரையாக உள்ளது.

டாபிக்ஸ்