முத்தஞ்சன் : முகலாயர்களின் ஸ்வீட் முத்தஞ்சன் செய்வது எப்படி என்று பாருங்கள்! விருந்துகளில் செய்து அசத்தலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முத்தஞ்சன் : முகலாயர்களின் ஸ்வீட் முத்தஞ்சன் செய்வது எப்படி என்று பாருங்கள்! விருந்துகளில் செய்து அசத்தலாம்!

முத்தஞ்சன் : முகலாயர்களின் ஸ்வீட் முத்தஞ்சன் செய்வது எப்படி என்று பாருங்கள்! விருந்துகளில் செய்து அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 30, 2025 11:05 AM IST

முத்தஞ்சன் : இதை முகலாய சமையல்க்காரர்கள் முதன் முதலில் சமைக்கத் துவங்கினார்கள். அவர்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொண்டார்கள். பிற்காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பரவி தற்போது மக்கள் முத்தஞ்சனை பரவலாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். இதை நீங்கள் வீட்டிலேயும் செய்து சாப்பிட முடியும்.

முத்தஞ்சன் : முகலாயர்களின் ஸ்வீட் முத்தஞ்சன் செய்வது எப்படி என்று பாருங்கள்! விருந்துகளில் செய்து அசத்தலாம்!
முத்தஞ்சன் : முகலாயர்களின் ஸ்வீட் முத்தஞ்சன் செய்வது எப்படி என்று பாருங்கள்! விருந்துகளில் செய்து அசத்தலாம்!

தேவையான பொருட்கள்

• பாஸ்மதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி – 100 கிராம்

• முந்திரி – 8

• சாரப்பருப்பு – ஒரு ஸ்பூன்

• திராட்சை – ஒரு கைப்பிடியளவு

• பால் – அரை லிட்டர்

• ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

• சர்க்கரை – கால் கப்

• இனிப்பு இல்லாத கோவா – ஒரு கப்

• குங்குமப் பூ – கால் ஸ்பூன் (பாலில் ஊறவைத்துவிடவேண்டும்)

• நெய் – தேவையான அளவு

• கண்டன்ஸ்ட் மில்க் – கால் கப்

செய்முறை

1. அரிசி கழுவி சுத்தம் செய்து 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் முந்திரி, திராட்சை, சாரப்பருப்பு என மூன்றையும் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை தனியாக வைத்துவிடவேண்டும்.

3. அதேகடாயில் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் ஊறிய அரிசியைச் சேர்த்து குழைவாக வேகவிடவேண்டும். அது வெந்தவுடன் அதில் அரை லிட்டர் பாலை சேர்க்கவேண்டும். பாலை சேர்த்தவுடன் இனிப்பு இல்லாத கோவா சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவேண்டும். அடுத்து குங்குமப்பூ சேர்த்து கிளறவேண்டும்.

4. கடைசியாக சர்க்கரை மற்றும் கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து கிளறவேண்டும். இதற்கு தண்ணீராகவும் இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் மிதமான பதத்தில் இருக்கவேண்டும். கடைசியாக இதில் நெய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி உள்ளிட்டவற்றை சேர்க்கவேண்டும். சூடாக கலந்து பரிமாறினால், சுவையான முத்தஞ்சன் தயார். இதை விருந்து நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷ நாட்களில் செய்து சாப்பிட்டு மகிழலாம்.

இது பொதுவாக இஸ்லாமியர்களின் விருந்துகளில் பரிமாறப்படும் உணவாகும். இதை இன்று அனைவரும் தங்களின் விருந்துகளில் பரிமாறுகின்றனர். இது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த ஒரு உணவாக இந்த முத்தஞ்சன் கருதப்படுகிறது. இதை முகலாய சமையல்க்காரர்கள் முதன் முதலில் சமைக்கத் துவங்கினார்கள். அவர்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொண்டார்கள். பிற்காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் பரவி தற்போது மக்கள் முத்தஞ்சனை பரவலாக செய்து சாப்பிட்டு வருகிறார்கள். இதை நீங்கள் வீட்டிலேயும் செய்து சாப்பிட முடியும்.

இந்த முத்தஞ்சன் ரெசிபியை உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததாக இந்த ரெசிபி இருக்கும். பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் எளிது. ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.