பெண்களுக்கு தினமும் உணவில் கட்டாயம் ஒரு கீரை? இரும்புச்சத்து முதல் அதற்கான 10 காரணங்கள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பெண்களுக்கு தினமும் உணவில் கட்டாயம் ஒரு கீரை? இரும்புச்சத்து முதல் அதற்கான 10 காரணங்கள் என்ன?

பெண்களுக்கு தினமும் உணவில் கட்டாயம் ஒரு கீரை? இரும்புச்சத்து முதல் அதற்கான 10 காரணங்கள் என்ன?

Priyadarshini R HT Tamil
Oct 11, 2024 10:56 AM IST

பெண்களுக்கு தினமும் உணவில் கட்டாயம் ஒரு கீரை? இரும்புச்சது முதல் அதற்கான 10 காரணங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்களுக்கு தினமும் உணவில் கட்டாயம் ஒரு கீரை? இரும்புச்சத்து முதல் அதற்கான 10 காரணங்கள் என்ன?
பெண்களுக்கு தினமும் உணவில் கட்டாயம் ஒரு கீரை? இரும்புச்சத்து முதல் அதற்கான 10 காரணங்கள் என்ன?

இரும்புச்சத்து

பெண்களுக்கு தேவையான அடிப்படையான சத்துக்களுள் ஒன்று இரும்புச்சத்து, இது குழந்தை பெற்றுக்கொள்ளும் பருவத்தில் கட்டாயம் தேவை. இரும்புச்சத்துக்கள் உங்களுக்கு அனீமியாவைத் தடுக்க உதவுகிறது. இது உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கின்றன. 100 கிராம் பாலக்கீரையில் 2.7 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது.

ஃபோலேட் (வைட்டமின் பி9)

ஃபோலேட், கர்ப்பிணிகளுக்கு கரு வளர்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து ஆகும். இது குழந்தைகளுக்கு நரம்புகளில் பிரச்னைகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. 100 கிராம் கீரையில் 165 மில்லிகிராம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது.

கால்சியம்

100 கிராம் கீரையில் 99 மில்லிகிராம் கால்சியச் சத்துக்கள் உள்ளது. இது பெண்களின் எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், எலும்புப்புரை நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும், தசைகளின் இயக்கத்துக்கு உதவுவதற்கும் உங்களுக்கு கால்சியம் மிகவும் தேவைப்படுகிறது.

மெக்னீசியம்

100 கிராம் கீரையில் 79 மில்லிகிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் தசைகள் மற்றும் நரம்புகளின் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை சரிசெய்கிறது. எலும்பு ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது.

வைட்டமின் கே

ரத்தத்தை உறையச் செய்யவும், எலும்பு ஆரோக்கியத்துக்கும் வைட்டமின் கே சத்து மிகவும் முக்கியமானது. அது கீரையில் அதிகளவு உள்ளது. 100 கிராம் கீரையில் 482 மில்லி கிராம் வைட்டமின் கே சத்துக்கள் உள்ளது. பெண்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்க வைட்டமின் கே தேவைப்படுகிறது.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறன் அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. இது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு நல்லது. 100 கிராம் கீரையில் ஒரு நாளைக்கு தேவையான அளவு வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது.

வைட்டமின் சி

வைட்டமின் சி ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். 100 கிராம் கீரையில் 28.1 மில்லிகிராம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இது உங்கள் உடலில் கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. இது உங்களின் இரும்புச்சத்துக்கள் கிரகிக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது. இது பெண்களுக்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது.

லியூட்டின்

லியூட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் கண் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இது உங்களுக்கு வயோதிகம் தொடர்பான கண் கோளாறுகள் ஏற்படாமல் காக்கிறது. லியூட்டின் பெண்களுக்கு வயதாகும்போது அதிகமாக தேவைப்படும் ஒன்றாகும். 100 கிராம் கீரையில் 10 மில்லிகிராம் லியூட்டின் உள்ளது.

பொட்டாசியம்

100 கிராம் கீரையில் 558 மில்லிகிராம் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. இது பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. இது பெண்களுக்கு மெனோபாஸ்க்கு முந்தைய காலத்துக்கு மிகவும் முக்கியமானது.

மாங்கனீஸ்

100 கிராம் கீரையில் 0.9 மில்லிகிராம் மாங்கனீஸ் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலில் எலும்பு வளர உதவுகிறது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது. பெண்களுக்கு வலுவான எலும்புகள் வளரவும் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்தவும் உதவுகிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.