Muskmelon Seeds Benefits : முலாம்பழ விதைகளை உலர வைத்து தினமும் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை பாருங்க!
Muskmelon Seeds Benefits : முலாம் பழ விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் ஈ போன்ற முக்கியமான வைட்டமின்கள் உள்ளன. அவற்றில் துத்தநாகம், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன.

Muskmelon Seeds Benefits : முலாம்பழம் கோடையில் கிடைக்கும் ஒரு பழம். இது நம உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பழம். இந்த பழத்தால் செய்யப்டும் ஜூஸ் பலருக்கும் விருப்ப முடையதாக இருக்கும். இது சிறந்த ஈரப்பதமூட்டும் பண்புகளை வழங்குகிறது. உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. தற்போது, முலாம்பழம் அனல் காற்றைத் தாங்கும் பழமாக உள்ளது. இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு பலர் விதைகளை பலர் வீணாக கீழே எரிந்து விடுகின்றனர்.
முலாம்பழ விதையில் உள்ள சத்துக்கள்
முலாம்பழ விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் ஈ போன்ற முக்கியமான வைட்டமின்கள் உள்ளன. அவற்றில் துத்தநாகம், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. பழத்தை உண்ட பின் விதைகளை கீழே தூக்கி எறிந்து விடாமல் காயவைத்து தோலை உரித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த விதைகளில் புரதம் நிறைந்துள்ளது. அவை சைவ உணவு உண்பவர்களுக்கு நிறைய புரதத்தை வழங்குகின்றன. இதில் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியைத் தடுக்கும். அவை ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முலாம்பழம் விதைகளில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கலவைகளும் உள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.