Mushroom Thonnai Biriyani : மஸ்ரூம் தொன்னை பிரியாணி; கடையில் மட்டுமே சாப்பிட்டதை இனி வீட்டிலேயே செய்யலாம்!
Mushroom Thonnai Biriyani : மஸ்ரூம் தொன்னை பிரியாணி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
மேரியனேட் செய்ய
மஸ்ரூம் – ஒரு பாக்கெட்
தயிர் – கால் கப்
உப்பு – சிறிது
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
(மஸ்ரூமை சுத்தம் செய்து, நறுக்கி அதில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக ஊறவைக்கவேண்டும்)
சீரக சம்பா அரிசி – ஒரு கப் (அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
பெரிய வெங்காயம் – 1
தாளிக்க
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
நெய் – ஒரு ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
ஏலக்காய் – 1
ஸ்டார் சோம்பு – 1
பிரியாணி இலை – 1
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மசாலா அரைக்க
பட்டை – 1
கிராம்பு – 4
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
மிளகு – கால் ஸ்பூன்
ஏலக்காய் – 1
மல்லித்தழை – சிறிது
புதினா – சிறிது
(பட்டை, கிராம்பு, மிளகு, சின்ன வெங்காயம், ஏலக்காய், மல்லித்தழை, புதினா இவற்றை அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, கிராம், பிரியாணி இலை, ஏலக்காய், ஸ்டார் சோம்பு என அனைத்தும் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும.
அடுத்து பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாப் பொருட்களையும், மேரியனேட் செய்து வைத்துள்ள மஸ்ரூமையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். குக்கரை மூடி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவேண்டும். அடுத்து அதில் எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ளவேண்டும்.
அடுத்து அதில் இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு எடுத்தால் சூப்பர் சுவையான தொன்னை பிரியாணி தயார். இதில் நெய், மல்லித்தழை தூவி அலங்கரிக்கலாம். தேவைப்பட்டால் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்தும் சேர்த்து அலங்கரிக்கலாம். சூப்பர் சுவையான மஸ்ரூம் தொன்னை பிரியாணி தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி மட்டும் போதும்.
இது உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் செய்வீர்கள். குறிப்பாக மஸ்ரூம் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்படுவார்கள். இது பெரும்பாலும் ரெஸ்டாரன்ட்களில் மட்டுமே பரிமாறப்படும் ஒன்றாகும். அதை நீங்கள் எளிதாக வீட்டிலேயேவும் செய்ய முடியும். இதற்கு வேறு கிரேவி மற்றும் 65களும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்